digestion issues, tips to avoid digestive issues, digestive disorders, healthy diet, sleep cycleindianexpress.com, indianexpress, lockdown, quarantine, isolaytion gas bloating, constipation, food hygiene, how to avoid bloating, what to do if you have gas, digestion issues, eating health, lockdown health, lockdown fitness, water levels
ஜீரணகோளாறுகளால் உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தை பேணுவதற்கான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
Advertisment
ஊரடங்கு காரணமாக நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றோம். இந்த சூழலில் நெஞ்சு எரிச்சல், அசிட்டி, இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற ஜீனரணகோளாறு நோய்கள் நம்மில் பலருக்கு பொதுவாக இருக்கலாம். இந்த ஜீரணகோளாறுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு தங்கு தடையற்ற திட்டத்தை மேற்கொள்ளலாம். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை . ஆரோக்கியமான ஜீரண முறையை நிர்வகிக்க உதவும் எளிய முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று ஜென் மருத்துவமனையின் இயக்குநரும் இரைப்பை குடல் இயல் மருத்துவருமான டாக்டர் ராய் பட்நாகர் அறிவுறுத்துகிறார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
மக்கள் சந்திக்கும் ஜீரணகோளாறின் வகைகள்
அமில எதிர்வினை(Acid reflux)
ஒருவருடைய உடலின் வயிற்றின் கீழ் உணவுக் குழாய் சுழற்சி முறையாக இயங்காவிட்டால், அமில எதிர்வினை ஏற்படும். இந்த உணவுக்குழாய் சுழற்சி என்பது, ஒருவரின் வயிற்றுக்கும் உணவுக்குழாயுக்கும் இடைப்பட்ட தசைகளின் வளையம் என்றும் சொல்லலாம். முறையான ஜீரண செயல்பாடுகளின்போது, உணவானது வயிற்றுக்குள் செல்வதற்கு வழிதரும் வகையில் இந்த வளையம் திறக்கும். வயிற்றில் உருவாகும் அமிலத்தில் இருந்து உணவுக்குழாயைப் பாதுகாக்கிறது. ஆனால், கீழ் உணவுக் குழாய் சுழற்சி வலுவிழந்தால் அல்லது தளர்வானால், உணவுக்குழாயில் அமில எதிர்வினை ஏற்படும். இதனால், எரிச்சல் ஏற்படும். தவிர, அமில எதிர்வினையால், நெஞ்சுஎரிச்சல் (heartburn) அறிகுறியையும் நீங்கள் உணரலாம். அமிலமானது, ஒருமுறை உணவுக்குழாயில் புகுந்து விட்டால், அதில் உள்ள செல்லின் உற்புறத்தில் எரிச்சலும், வலியும் ஏற்படும். அதே நேரத்தில் எல்லா அமில எதிர்வினைகளும் நெஞ்சல் எரிச்சலை நோக்கிச் செல்லாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நெஞ்சு எரிச்சல் என்பது, அமில எதிர்வினையின் ஒரே ஒரு அறிகுறிதான். அடிவயிறு வலி, தொண்டை புண், வீக்கம், வயிற்று கோளாறு, குமட்டல், உணவு விழுங்குவதில் சிரமம், தொண்டையின் பின்புறத்தில் அமில சுவை உணர்வு ஆகியவையும் அமில எதிர்வினையின் இதர அறிகுறிகளாகும்.
வயிறு(உணவுக்குழாய்), வாயை இணைக்கும் குழாயில் வயிற்றின் அமிலம் மீண்டும் செல்லும்போது இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் ஏற்படுகிறது. இது உணவுக்குழாயின் உட்புறத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக உணவு விழுங்குவதில் சிரமம், நெஞ்சு வலி, தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு, நாள்பட்ட இருமல், தூக்கம் குறைவு, வாயில் புளிப்பு சுவை, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இப்போது, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில் இருப்பதால், உணவு உண்ணும் பழக்கம் அல்லது தூங்கும் சுழற்சியில் மாறுபாடு ஏற்படலாம். இதனால், அந்த நிலை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
வயிற்றுப் போக்கு
அடிக்கடி மலம் கழித்தல் அல்லது தண்ணீராக மலம் கழித்தல் ஆகியவை ஏற்படுகிறது. உணவில் தொற்று, பாக்டீரியா, மன அழுத்தம், சில மாத்திரைகளின் எதிர்விளைவுகள் ஆகியவற்றின் காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்படலாம். அடிவயிறு வலித்தல், தசைபிடிப்பு, வாந்தி, சோர்வு ஆகியவை ஏற்படலாம்.
மலச்சிக்கல்
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக ஒருவர் மலசிக்கலால் பாதிக்கப்படக்கூடும். ஒரு வாரத்துக்கு குறைந்த அளவு மலம் கழிப்பதை மலச்சிக்கல் என்று சொல்கின்றோம். மலம் கழிப்பது கடினமாக இருத்தல், மலம் கழிப்பதில் சிரம ம் அல்லது மலம் கழிக்க இயலாமை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மூல நோய்
ஆசனவாய் மற்றும் மலக்குடலுக்கு கீழே உள்ள நரம்புகளில் வீக்கம் இருக்கும். இந்த குழல்களின் சுவர்கள் விரிவடையும்போது, அவை எரிச்சலாக இருக்கும், ரத்தம் கூட வரலாம். எனவே, இந்த நிலை மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டியது முக்கியமாகும்.
ஜீரணகோளாறுகளை சரி செய்வதற்கான வழிகள்
காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு மோசமான சூழலைக் கொடுக்கும் உணவு, பானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எண்ண உண்ண வேண்டும் என்றும், குடிக்க வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த காரணங்கள் ஒருருக்கு ஒருவர் வித்தியாசப்படும் என்பதை மறந்து விட வேண்டாம். சுயமாக மருத்துவம் பார்ப்பதைத் தவிருங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஆரோக்கியமான, சரிசம மான உணவு பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
தவறான உணவுப் பழக்கங்களை கைவிடுங்கள். முறையான உணவுப் பழக்கத்துக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமாகும். அதிக அளவு உண்ணுதலை தவிருங்கள். நார்சத்து அதிகமுள்ள பொருட்களை உண்ணுங்கள். இது உங்கள் ஜீரண சக்தியை முறைப்படுத்தும். வாயு, வயிற்றுப் போக்கு, வயிறு வீக்கம் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்
சாப்பிட்ட உடன் படுப்பதை தவிர்க்கவும். அதிக அளவு உண்ணாதீர்கள். அதிக உணவு உட்கொள்ள வேண்டாம். அதற்கு பதில் சிறிய அளவில், இடைவெளி விட்டு உண்ணலாம்.
காரமான அமில மற்றும் சிட்ரஸ் உணவுகளுக்கு விடை கொடுங்கள்
மது, புகைப்பழக்கத்தை கைவிடுங்கள். சரியான உடல் எடையை நிர்வகியுங்கள். வெங்காயம்அல்லது தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டாம் அல்லது வெங்காயத்தை வெறுமனே உண்ணாதீர்கள்.
அமிலம் நிறைந்த உணவுகள், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட, எண்ணைய், மசாலா உணவுகளைத் தவிர்க்கவும்
இரவில் தாமதமாக உண்ணுவதைத் தவிருங்கள். மது அருந்துவதை கட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பழக்கத்தை குறையுங்கள். அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
கைகளை சுத்தமாக வைத்திருங்கள்
பாக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தடுக்க கழிவறைக்குச் சென்று வந்தபிறகும், உணவு உண்ணும் முன்பும் கைகளை சுத்தமாக கழுவவும். இதன் மூலம் வயிற்றுப் போக்கு ஏற்படாமல் தடுக்கலாம்.
மன அழுத்தம் ஜீரணசக்தி குறைபாட்டை ஏற்படுத்தும்
தியானம் அல்லது யோகாசனம் ஆகியவற்றின் மூலம் உங்கள் உடல், மனம் தளர்வாக இருக்கும் நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil