உணவு தயாரித்தல், வீட்டு வேலை செய்தல் உள்ளிட்ட நேரங்களில் தங்கள் குழந்தைகளின் நச்சறித்தல் தாங்காமல் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை குழந்தைகளிடம் கொடுக்கின்றனர்.
எனினும், இது தொடர்பான அடுத்தடுத்த ஆய்வுகள், இந்த அமைதியான முறை எதிர்காலத்தில் மிகவும் தீவிரமான நடத்தை சிக்கல்களுடன் இணைக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.
3-5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அமைதிப்படுத்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களை அடிக்கடி கொடுப்பது அவர்களின் உணர்ச்சி கட்டுப்பாட்டை பாதிக்கிறது என மருத்துவ ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் குழந்தைகளிடம் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அளிப்பது தற்காலிக அமைதிக்கான உத்தியாக காணப்பட்டாலும் வருங்காலங்களில் மனஅழுத்தம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகின்றன எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு, கோவிட்-19 பெருந்தொற்று தொடங்குவதற்கு முன், ஆகஸ்ட் 2018 மற்றும் ஜனவரி 2020 க்கு இடையில் பங்கேற்ற 422 பெற்றோர் மற்றும் 3-5 வயதுடைய 422 குழந்தைகளிடம் நடத்தப்பட்டு உள்ளது.
இதில், ஆறு மாத காலப்பகுதியில் உணர்ச்சி ரீதியான வினைத்திறன் அல்லது ஒழுங்கின்மைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
மேலும், மனநிலை அல்லது உணர்வுகளில் திடீர் மாற்றம், மனக்கிளர்ச்சி அதிகரிப்பு ஆகியவைம் அடங்கும்” என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/