இரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்!

வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைய உதவுகிறது.

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.

கலோரிகள் குறைந்த அதேசமயம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும் சத்துக்கள் கொண்ட காய்கறிகள், பழங்கள், அதிக புரதச்சத்துள்ள பருப்புகள் போன்றவையே வெயிட் வாட்ச்சர்ஸ் டயட். இதன்மூலம் எடையைக் குறைக்க முடிவதுடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரகளையும் சரி செய்கிறது. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உணவில் புரதத்தை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்த புரதம், உடலில் எடையை சீராக வைத்திருக்க கூடிய ஹார்மோன்களை மாற்றும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைய உதவுகிறது.

உடல் எடை

தால் ஹாவல்

இரவில் பருப்பு உணவுகள் அதாவது புரோட்டின் உணவுகளாக எடுத்துக் கொள்ளும் உடல் எடை குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வட இந்தியாவில் தால் ஷாவான் என்று சொல்லப்படும் உணவு அதிகப்படியான டயட் ஃபோட்டில் இடம் பெற்றிருக்கிறது.

நம் ஊர்களில் அதை பருப்பு சாதம் என்பார்கள். முழுக்க முழுக்க புரத உணவை நம்பி உடல் எடை க்ஜ்றைப்பில் இறங்குபவர்கள் தவறாமல் இரவில் பருப்பு உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close