Advertisment

முயற்சி திருவினையாக்கும்.. நிரூபித்த நெல்சன்.. சின்னத்திரை இயக்குனர் டு மோஸ்ட் வான்டட் டைரக்டர்!

நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் நெல்சன்,.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nelson dilipkumar

director nelson dilipkumar real life inspirational story

முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல், என படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை மட்டும் தான் பொதுவாக மக்களுக்கு தெரியும். அவர்களுக்காக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும்.  ஆனால் அந்த படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த’ இயக்குனர்களை மக்களுக்கு அவ்வளவாக தெரியாது.

Advertisment

பிறகு, காலம் மாறமாற மக்களின் ரசனையும் மாறியது. ஒரு படம் உருவாதற்கு பின்னால் இருக்கும்’ மற்ற தொழில்நுட்ப விஷயங்களையும் ரசிகர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். சினிமா குறித்த அவர்களின் பார்வையும் விரிவடைந்தது. இப்போது டிஜிட்டல் யுகம் எல்லாவற்றையும் கைக்குள் நெருக்கமாக கொண்டுவந்து விட்டது.

இப்படி ஒரு காலத்தில்’ தனது முதல் படத்திலேயே சினிமா ரசிகர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் நெல்சன்  திலீப்குமார்.

நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நெல்சன்,.

அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய டாக்டர் படம்’ கொரோனாவுக்கு மத்தியிலும் பெரியளவில் வசூலை குவித்தது. இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் கொடுக்க, நெல்சன்’ 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியது.

இப்போது அவர் தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே’ பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புரோமோ சமீபத்தில் வெளியாகி அதுவும் பயங்கர வைரலாகியது.

அந்த ஹைப் இன்னமும் குறையவில்லை. அதற்குள் நெல்சன் இயக்கும் 4 வது படத்தில் ரஜினி நடிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்துக்காக’ நெல்சன், சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருது வாங்கும்போது’ எனக்கு ரொம்ப போர் அடிக்கும்… அனிரூத் ஸ்டுடியோல போய் உட்காருவேன். அப்போ அனிரூத் எப்படி என்னைய கிளப்பி விடலாம்னு’ நெல்சன் நீங்க ஏன் டைரக்‌ஷன் பண்ண கூடாதுனு கேட்டார்.

நம்மள நம்பி இப்படி சொல்றாரேனு ஒரு ரெண்டு மாசம் உட்காந்து கதை எழுதி’ அவர்கிட்ட போய் சொன்னேன். அப்போ அனிரூத்’ லைக்கா புரோடக்‌ஷன்ஸ்ல பேசிருக்கேன். அங்க போய் கதை சொல்லுங்கனு சொன்னார். அப்புறம் ஓரு நாள் விக்கிக்கு கதை சொல்லி நயன்தாரா மேடம் கிட்ட சொல்லனும் சொன்னேன். அடுத்த நாளை நயன்தாரா மேடம் மீட் பண்ணி கதை சொன்னேன். அவங்க நல்லாருக்கு பண்ணலாம். சொன்னாங்க.. என அந்த விருது மேடையில் நெல்சன் பேசினார்.

அப்போதே நெல்சன், அனிரூத் நட்பு ரசிகர்களுக்கு பரிட்சயமானது. பிறகு டாக்டர் படத்தில் ஒவ்வொரு பாடலை ரிலீஸ் செய்வதற்கு முன்பும், சிவகார்த்திகேயன், அனிரூத், நெல்சன் மூவரும் சேர்ந்து போட்ட புரோமோ வீடியோ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. முக்கியமா நெல்சன் சொன்ன வேற மாரி, வேற மாரி டயலாக்கை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான்’ இப்போது பீஸ்ட் அரபிக் குத்து பாடல் புரோமோவிலும் நெல்சன், அனிரூத், சிவா மூன்று பேரும் பெரிய அமர்க்களமே செய்துள்ளனர்.

நெல்சன்’ அடுத்தடுத்த படங்களிலே தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவதை பார்த்த ரசிகர்கள், குறுகிய காலத்தில் இப்படி ஒரு வளர்ச்சியா என கூறி’ அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நெல்சனின் இந்த வெற்றி அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்துவிடவில்லை. அதற்கு பின்னால் ஒரு 15 வருட போராட்டம் இருக்கிறது.

வழக்கமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திக்கேயன் போன்ற ஹீரோக்களை தான் நமக்கு தெரியும். ஆனால் நெல்சனும் ஒரு காலத்தில் சின்னத்திரையில் தான் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

வேலூரில் பிறந்து வளர்ந்த நெல்சன், பள்ளிப்படிப்பை அங்கு முடித்து, கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்தார். சென்னை புதுக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தார். பிறகு, விஜய் டிவியில்’ அசிஸ்டென்ட் ஸ்கிரிப்ட் ரைட்டராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

சில ஆண்டுகளிலே, நெல்சன்' ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் என விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் இயக்குனராக பணியாற்றினார்.

சமீபத்தில் நெல்சன், விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு, உள்ளிட்டோர் ஃபிலிம் கம்பெனியன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போதுதான் நெல்சன் ஏற்கெனவே ஒரு படம் ஆரம்பித்து அது பாதியிலேயே முடிந்தது பலருக்கு தெரியவந்தது.

2010ஆம் ஆண்டு’ சிம்புவை வைத்து நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

முதல் படமே இப்படி தோல்வியில் முடிய நெல்சன்’ மீண்டும் சின்னத்திரைக்கு  திரும்பினார். இப்படி ஒரு நிலையில்தான் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் காற்று’ நெல்சன் பக்கம் வீச ஆரம்பித்தது.

கோலமாவு கோகிலாவில் ஆரம்பித்த நெல்சனின் வெற்றி பயணம் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், விகடன் விருது விழா வழங்கும் நிகழ்ச்சியில்’ ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் ஒரே மேடையில் தோன்றினர். சன் டிவிக்காக அந்த நிகழ்ச்சியை இயக்கியது நெல்சன் தான்.

இப்போது அதே நெல்சன்’ தனது அடுத்தடுத்த படத்தில் சிவகார்த்திக்கேயன், விஜய், ரஜினி என அடுத்தடுத்து மூன்று பெரிய ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் குரலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் இயக்குனர் நெல்சன்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Sivakarthikeyan Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment