அன்னைக்கு ஒரு பாட்டு புஸ்தகம் 15 பைசா.. என் அப்பாகிட்ட வாங்கின அடி- இயக்குநர் ராஜகுமாரன் எமோஷனல் பிளாஷ்பேக்

ஏழாவது நாள், சந்தைக்குச் போற பக்கத்து வீட்டு அக்கா, பெரியம்மாள் கிட்ட அந்த முப்பது பைசாவை கொடுத்து, "எனக்கு ரெண்டு பாட்டு புத்தகங்கள் வாங்கிட்டு வரீங்களா?"ன்னு கேட்பேன். இப்படி 200 பாட்டு புஸ்தகங்கள் வாங்கி பரண் மேல யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன்.

ஏழாவது நாள், சந்தைக்குச் போற பக்கத்து வீட்டு அக்கா, பெரியம்மாள் கிட்ட அந்த முப்பது பைசாவை கொடுத்து, "எனக்கு ரெண்டு பாட்டு புத்தகங்கள் வாங்கிட்டு வரீங்களா?"ன்னு கேட்பேன். இப்படி 200 பாட்டு புஸ்தகங்கள் வாங்கி பரண் மேல யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன்.

author-image
WebDesk
New Update
Director Rajakumaran Actress Devayani daughter

Director Rajakumaran Actress Devayani daughter Iniya

சரிகமப மேடையில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான தருணம், பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டுச் சென்றது. பிரபல நடிகை தேவயானியின் மகள் இனியா, தனது திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், 'டெடிகேஷன் ரவுண்ட்' சுற்றில் தந்தை ராஜகுமாரனுக்காக அவர் பாடியது, அனைவரையும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.

Advertisment

இனியாவின் பாடல் முடிந்த பிறகு, ராஜகுமாரன் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு உருக்கமான நிகழ்வை நினைவுகூர்ந்தார். 



நான் சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போறப்போ, எனக்கு அஞ்சு பைசா கொடுப்பாங்க. அது லஞ்சம் மாதிரிதான். அந்த அஞ்சு பைசால அஞ்சு ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடலாம், அஞ்சு தேன் மிட்டாய் சாப்பிடலாம், இல்லன்னா ஒரு கடலை உருண்டை வாங்கி சாப்பிடலாம். ஆனா, நான் எதையுமே சாப்பிடாம, அந்த அஞ்சு பைசாவை சேர்த்து வைப்பேன். ஒரு நாளைக்கு அஞ்சு பைசான்னா ஆறு நாளுக்கு முப்பது பைசா சேரும்.

ஏழாவது நாள், சந்தைக்குச் போற பக்கத்து வீட்டு அக்கா, பெரியம்மாள் கிட்ட அந்த முப்பது பைசாவை கொடுத்து, "எனக்கு ரெண்டு பாட்டு புத்தகங்கள் வாங்கிட்டு வரீங்களா?"ன்னு கேட்பேன். இப்படி 200 பாட்டு புஸ்தகங்கள் வாங்கி பரண் மேல யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன். யாருக்கும் தெரியாம படிச்சுட்டு இருப்பேன். என் அப்பாவுக்கு ஒருநாள் இது தெரிஞ்சுபோனதுக்கு அப்புறம், மாடு ஏத்தும்போது, ஏத்தும்போது ஒரு சாட்டையால் அடிச்சுட்டு ஏறிப்பாங்க. அந்த சாட்டையால என்னை கட்டிப் போட்டு வெளுத்து வாங்கிட்டாரு.

Advertisment
Advertisements

Director rajakumaran Devayani

ஆனா, அதுக்கு அப்புறம் அதே பொறிகடலை கடைக்குள்ள என் படத்தோடய 'நீ வருவாயென' பாட்டு புத்தகம் இருந்தது. அந்த புத்தகம் ஐம்பது பைசா ஆயியிருந்தது. என் கதை வசனம் உள்ள புத்தகங்களும் அங்கே இருந்தது.

அதுக்கு அப்புறம் நான் பெரிய ஹீரோயின் கல்யாணம் பண்ணேன், படத்தை தயாரிச்சேன், டைரக்ட் பண்ணேன், நடிச்சேன். ஹீரோவாவும் ஆனேன். நல்ல வெற்றிப்படத்தில கூட கொண்டாடி இருக்கிறேன். நம்ம வேலைய நம்ம செய்திருக்கிறோம் அப்படின்னு நினைத்தேன். ஆனாலும், நான் எதையுமே ஒரு பெரிய வெற்றியாக நினைத்ததில்லை.

இனியா சரிகமப ஜீ தமிழ்ல நிக்கும் போது தான் நாம ஏதோ சாதிச்சிட்டோம் அப்படின்னு நினைக்கிறேன், ஒரு பாட்டு புத்தகம் வாங்குறதுக்காக அடிவாங்கின நாமதான், ஒரு பாட்டு மேடையில வந்து நிக்கிறோம். இதுதான் எங்களுடைய லைஃப். நீங்களும் அங்கே வரணும்னு நாங்க நினைக்கிறோம். இதுதான் எங்களுடைய சாதனை, “ என்று தழுதழுத்த குரலில் ராஜகுமாரன் கூறியபோது அரங்கமே உணர்ச்சிவசத்தில் மூழ்கியது. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: