Sasikumar Viral Photoshoot Tamil News : ப்ரவுன் ப்ளேசர், ப்ளூ பேன்டஸ், வெள்ளை கேன்வாஸ், கூலர்ஸ், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் மற்றும் தாடி. இவையனைத்தும் இன்றைய மாடர்ன் ஹீரோவின் மேக் ஓவர் அல்ல. மடிச்சு கட்டிய வெட்டி, அந்தக் காலத்து சட்டை, முறுக்கிய மீசையில் பார்த்து பழகிய இயக்குநர் சசிகுமாரின் யாரும் எதிர்பார்த்திராத அவதாரம்தான் இது.
பெரும்பாலும் கிராமத்து கெட்-அப்களிலேயே பார்த்து பழகிய நமக்கு, சசிகுமாரின் இந்த சேஞ் ஓவர், மிரட்டல் அடி. 2008-ம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகியவர், தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், கென்னடி கிளப், நாடோடிகள் 2 என கிராமத்துக் கதைகளின் கதாநாயகனாக சசிகுமார் வலம்வந்தார்.
கதர் வேட்டி, அழுக்கு லுங்கி, முறுக்கு மீசை, லெதர் செருப்பு என பக்காவான மண்மணம் மாறாத கிராமத்து இளைஞராக வந்து அனைவரின் மனதிலும் குடிகொண்டவர், ஆடை வடிவமைப்பாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான சத்யாவின் முயற்சியில் வித்தியாசமான ‘City Dude’ தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சசிகுமாரின் இந்த மாடர்ன் கேட்-அப் புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மன், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் மாடர்ன் கெட்-அப்களில் வந்தாலும், அவை மக்களிடத்தில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இந்த புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ்வான பதிவுகளையே பகிர்ந்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Director sasikumar latest viral photoshoot actor sasi kumar viral photos