2021 நவம்பரில் வெளியான 'மாநாடு' படம், அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் செய்தது.
Advertisment
சமீபத்தில், 'மாநாடு' படம் 100 நாள் வெற்றி விழாவை கொண்டாடியது. இதையொட்டி இயக்குனர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அடுத்ததாக வெங்கட்’ சிவகார்த்திகேயன்’ உடன் இணைவதாக தெரிகிறது.
சிவா’தனது தற்போதைய கமிட்மென்ட்டை முடித்தவுடன் இயக்குனருடன் கைகோர்க்க ஒப்புக்கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி நிச்சயம் நடக்கும் என்றும், இன்னும் சில மாதங்களில் இருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்குவார்கள் என்றும் பேசப்படுகிறது.
முன்னதாக 'மாநாடு' படத்தின் வெளியீட்டு நாளில்’ அதிகாலை 3 மணிக்கு சிவகார்த்திகேயன் வெங்கட்டுக்கு’ போன் செய்ததாகவும், படத்தின் வெளியீடு தொடர்பான சிக்கலில், அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும், வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் திலகம் எம்ஜிஆர் மடியில் சிறு வயது பையனாக’ வெங்கட் பிரபு’ அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயம், இளையராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, வெள்ளை குர்தா, தலையில் பட்டை என சிறு வயது பையனாக வெங்கட் பிரபு எம்ஜிஆரின் மடியில் உட்கார்ந்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இப்போது மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பளருமான கங்கை அமரனுக்கும், அவரது சகோதரர் இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே’ கருத்து வேறுபாடு இருந்ததால், பல ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
இந்நிலையில்’ 13 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில் இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சென்று சந்தித்தார். அந்த மகிழ்ச்சியான புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“