பல தசாப்தங்களுக்கு பிறகு குளித்த உலகின் மிக அழுக்கு மனிதர் மரணம்

அமு ஹாஜி’ ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அமு ஹாஜி’ ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

author-image
WebDesk
New Update
iran news

World's dirtiest man

அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த உலகின் அழுக்கு மனிதர், தனது 94வது வயதில் ஈரானில் அண்மையில் காலமானார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வயது தொடர்பான காரணங்களால் அவர் காலமானார் என்றாலும், அவர் இறப்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு குளித்தார்.

Advertisment

அமு ஹாஜி’ (வயதான நபரை குறிக்கும் ஒரு அன்பான சொல்) ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அமு ஹாஜி பல தசாப்தங்களாக குளிக்கவில்லை. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சோப்பு மற்றும் தண்ணீரிலிருந்து விலகி இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

கார்டியன் அறிக்கையின்படி, அவர் இளமையில் சில உணர்ச்சிப் பின்னடைவுகளை சந்தித்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர், இதனால் அவர் குளிக்க மறுத்தார்.

அவர் சாலை ஓரங்களில் வசித்தார். விலங்குகளின் கழிவுகளால் நிரப்பப்பட்ட ஒரு பீடியைத் தான் புகைப்பார். சுத்தமாக இருப்பது தன்னை நோயாளியாக்கி விடும் என்று அவர் நம்பியதாக தெஹ்ரான் டைம்ஸ் 2014 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

இணையத்தில் கிடைக்கும் அவரது புகைப்படங்கள், அழுக்கு படிந்த உடைகளுடன், ஒரே நேரத்தில் பல சிகரெட்டுகளை புகைப்பதைக் காட்டுகின்றன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, கிராமவாசிகள் அவரை நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக குளிக்குமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டனர். அது அவரது கடைசி குளியலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுவாரஸ்யமாக, ஹாஜியின் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், உலகிலேயே மிகவும் அழுக்கானவர் என்ற பட்டத்தைப் பெறலாம்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் ‘கலாவ்’ சிங் என்பவர், தேசம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்கவில்லை என்று 2009 இல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான நீர் குளியலை விட "தீ குளியல்" செய்வதை விரும்புவதாக அவர் கூறினார், அது உடலில் உள்ள அனைத்து கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களையும் கொல்லும் என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: