கோவை ஆர்.எஸ்.புரம் சாபாபதிபுரம் பகுதியைs சேர்ந்த மாற்றுத் திறனாளியான கலையரசன் (27) கூலி வேலை செய்து வருகிறார். வீரபாண்டி அறிவொளி நகரைச் சேர்ந்த வைதேகி (20). ஆகியோர் திருமணம் செய்து கொள்ள மருதமலை கோயிலில் விண்ணப்பித்து இருந்தனர்.
மருதமலை கோவில் நிதியில் இருந்து மாற்றுத் திறனாளியின் கல்யாணத்தை மிக சிறப்பாக சீர்வரிசையுடன் கோயில் நிர்வாகம் செய்து வைத்தது. மணமகன் கலையரசனுக்கு பிறவி முதலே வாய்பேச முடியாமலும் காது கேட்காதது 81 சதவீதம் உடல் ஊனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருதமலை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயகுமார், உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம் குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா, ராஜரத்தினம் மற்றும் கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கல்யாணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் தாலி எடுத்து கொடுக்க வேத மந்திரங்கள்,மேளதாளம் முழங்க கல்யாணம் உற்சாகமாக நடந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/GuBLeYTLU3ClsTnFeTyN.jpeg)
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முருதமலை கோயில் நிதியில் இருந்து சுமார் தங்க தாலி உட்பட கட்டில், மெத்தை, பீரோ, பாய் உள்ளிட்ட 19 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையாக கொடுத்தனர். ரூ.60,000 பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பாகவும் , ரூ.40,000 கோயில் உபயதார்கள் சார்பாக மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன.
செய்தி: பி.ரஹ்மான்