செக்ஸியா ஆடுவாங்களே! அவுங்கதானே உங்க அக்கா’னு சொல்லுவாங்க: லலிதா குமாரி எமோஷ்னல்

நீங்க எப்படி ஆஃபீஸ் போறீங்களோ, எங்க அக்காவும் அதுபோல வேலைக்குத்தான் போய்ட்டு வராங்க. உங்களுக்கு அது தப்பா தோணிச்சுனா, அது உங்க கண்ணோட்டத்தோட தவறு. அதை நீங்க மாத்திக்கணும்.

நீங்க எப்படி ஆஃபீஸ் போறீங்களோ, எங்க அக்காவும் அதுபோல வேலைக்குத்தான் போய்ட்டு வராங்க. உங்களுக்கு அது தப்பா தோணிச்சுனா, அது உங்க கண்ணோட்டத்தோட தவறு. அதை நீங்க மாத்திக்கணும்.

author-image
WebDesk
New Update
Disco Shanthi

Disco Shanthi and Lalitha Kumari

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சிகரமான நடனத்திற்கும், துணிச்சலான கதாபாத்திரங்களுக்கும் பெயர் பெற்றவர் டிஸ்கோ சாந்தி. 1980-90களில் ரசிகர்களின் இதயங்களை தன் வசப்படுத்திய இந்த 'டிஸ்கோ குயின்', ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், பல படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்து, கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.

Advertisment

டிஸ்கோ சாந்தியின் திரை வாழ்க்கை எவ்வளவு பிரகாசமானதோ, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அதற்கு நேர்மாறாக இருந்தது. இவர் தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அவரது கணவர் ஸ்ரீஹரி திடீரென மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த இழப்பு டிஸ்கோ சாந்தியை நிலைகுலையச் செய்தது.

Advertisment
Advertisements

சமீபத்தில் அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பிரபல நடிகை லலிதா குமாரி, தன் அக்கா டிஸ்கோ சாந்தியை பற்றி மனம் திறந்து பேசினார்.

"அக்கா (டிஸ்கோ சாந்தி) பத்தி பேசும்போது எனக்கு மனசுக்குள்ள ஒரு வலி வரும். நாங்க வெளியில எங்காவது போகும்போது அவங்களப் பார்த்து 'டிஸ்கோ சாந்திதானே? கவர்ச்சியா ஆடுவாங்க, செக்ஸியா ஆடுவாங்களே! அவுங்கதானே உங்க அக்கா அப்படின்னு சொல்லுவாங்க. எனக்கு அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும், 'ஏன் இப்படிச் சொல்றாங்க'னு தோணும். ஆனா நாங்க சினிமாவுல இருக்கிறதனால அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்காங்கனு எங்களுக்குத் தெரியும்.

ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல நான் ஒருத்தர் மட்டும் ஆடலை. நான் ஆடுறேன்னு வெச்சுக்கோங்க, எங்க ஷூட்டிங்ல அஞ்சு பேர் இருப்போம். ஆனா ஒரு படம் தியேட்டர்ல வரும்போது நூறு பேர் பார்த்திட்டு இருப்பாங்க. இங்க இருக்கிறவங்க பேசுறதெல்லாம் தாண்டி, எங்க அக்காவுக்கு எவ்வளவு வலி இருந்துச்சோனு எனக்குத் தோணிச்சு. அந்த நூறு ஆண்களை எப்படி சமாளிச்சு, எவ்வளவு கமெண்ட்ஸ் பேசி இருப்பாங்கனு எனக்குத் தெரியும். அதையும் தாண்டி அக்கா எங்களின் குடும்பத்துக்காக இதைச் செஞ்சிருக்காங்க.

நீங்க எப்படி ஆஃபீஸ் போறீங்களோ, எங்க அக்காவும் அதுபோல வேலைக்குத்தான் போய்ட்டு வராங்க. உங்களுக்கு அது தப்பா தோணிச்சுனா, அது உங்க கண்ணோட்டத்தோட தவறு. அதை நீங்க மாத்திக்கணும். நாங்க எங்க தொழிலைச் செஞ்சிட்டு இருக்கோம். அதுல எந்த விதமான தவறும் இல்லைன்னு கோபத்தோட பேச ஆரம்பிச்சேன். பயங்கரமா அவங்க கிட்ட சண்டை போடுவேன்”, என்று லலிதா குமாரி அந்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.

டிஸ்கோ சாந்தி, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நடன ராணியாக கோலோச்சியவர். அவருடைய நடனம், ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் அளித்தது. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவித்த சோகங்கள், ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலிகளை நமக்கு உணர்த்துகின்றன. இன்று அவர் திரையில் இருந்து விலகி இருந்தாலும், அவரது நடன அசைவுகள் இன்றும் நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: