‘நான் ராமநாதபுரத்து பொண்ணாக்கும்’: ’பாக்கியலட்சுமி’ ஜெனிபர்!

மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யாவுக்கு, அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே கனவு.

Tamil Serial News, Divya Ganesh, Vijay TV serial
Tamil Serial News, Divya Ganesh, Vijay TV serial

Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில், தற்போது செழியன் – ஜெனிபர் திருமணம் குறித்த எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜெனிபராக நடிப்பவர் திவ்யா கணேஷ்.

Tamil Serial News, Divya Ganesh 1
மணப்பெண்ணாக திவ்யா.

சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான திவ்யா, அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார். இப்போது விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் ராமநாதபுரம் தானாம். பி.எல் படிக்க மதுரைக்கு அனுப்பலாம் என்று வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, கல்யாணம் ஆகி சென்னையில் செட்டில் ஆன அக்கா, அங்கு வந்து படிக்கும்படி அழைப்பு விடுத்தாராம். அப்போது அக்காவின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சீரியல் இயக்குநர், அவரது சீரியலில் நடிப்பாங்களா என்று கேட்க, பயத்தில் மறுத்து விட்டாராம் திவ்யா. கொஞ்ச நாள் கழித்து சரி போய்த்தான் பார்ப்போமே என்று சென்றதன் விளைவு தான் இன்று சீரியல்களில் பிஸியாக வலம் வர வைத்திருய்க்கிறதாம்.

Tamil Serial News, Divya Ganesh 1
மார்டன் திவ்யா…

மேக்கப் பொருட்கள் வாங்குவதில் அலாதி பிரியம் காட்டுவாராம் திவ்யா. அத்தனை மேக்கப் பொருட்களையும் தனது முகத்தில் நேர்த்தியாக போட்டுக்கொள்வதிலும் கில்லாடி. நிறைய மேக்கப் போட்டுக்கொண்டாலும், அது மைல்டாக தெரியும்படி தனக்கென ஒரு டிரிக்ஸை வைத்திருக்கிறாராம்.

Tamil Serial News, Divya Ganesh 1
கிறிஸ்துவ முறை மணப்பெண்ணாக…

சீரியலை தவிர, மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் திவ்யா. அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார். மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யாவுக்கு, அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே கனவு.

Tamil Serial News, Divya Ganesh 1
டிரடிஷனல் லுக்கில்…

படிப்புத்தான் கடைசி வரை கைக்கொடுக்கும் எனும் திவ்யா, பெங்களூரு, கேரளா போன்ற சவுத் இண்டியன் கேர்ள்ஸ் மட்டும் இல்லாமல், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய ஊர்களில் இருந்து தமிழ் சீரியல்களில் நடிக்க பெண்கள் வந்திருக்கும் நேரத்தில், இப்போது தமிழ் நாட்டு பெண்களும் நிறைய பேர் நடிக்க வந்து இருப்பது மகிழ்ச்சி, என்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Divya ganesh vijay tv baakiyalakshmi serial tamil serial news

Next Story
சிம்பிளான மல்லி சட்னி: பேச்சிலர்களும் சுலபமா செய்யலாம்chutney recipes making chutney
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com