Diwali 2019 Delicious food recipes Maddur Vada Madakku Poori : தீப ஒளி என்று தீபாவளியைக் கூறுவார்கள். பண்டிகை என்ற சொல்லை கேட்டவுடன் அனைவருக்கும் ஓர் உற்சாகம் பிறப்பது இயல்பு. இதில் தீபாவளித் திருநாள் என்றால் இன்னும் சிறப்பு. இத்தீபத் திருநாளில் நாம் அணியும் புத்தாடைகள், தித்திக்கும் இனிப்புகள், பாரம்பரிய பலகாரங்கள், மற்றும் மத்தாப்புகள் ஆகியவைகளே அந்த சிறப்பு நாளுக்கு காரணம்.
இந்த தித்திக்கும் தீபாவளியை மேலும் சிறப்பாக்க சுவையான சிறந்த தீபாவளி பலகாரங்கள் இதோ.
மடக்கு பூரி
தேவையானப் பொருட்கள்
கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, கோதுமை மாவு, நெய், முந்திரி, எண்ணெய், துருவிய தேங்காய்,
செய்முறை
➤ ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன், நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை பிசைய்ந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் உலர வைத்த துருவிய தேங்காய், சர்க்கரை, நொறுக்கிய முந்திரி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார். இதையடுத்து சப்பாத்தி உருட்டியை பயன்படுத்தி பூரியை தயாரிக்கவும். தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பூரியினுள் வைத்து மடித்துக்கொள்ளவும். பின் ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மடக்கு பூரியை போட்டு நன்கு பொரித்தெடுக்க வேண்டியதுதான். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
Read more : முடி உதிர்வினை தடுக்க உணவு தான் மருந்து… இந்த 5 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
மதுர் வடை
தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், ரவை,கறிவேப்பிலை, பெருங்காய தூள்,
செய்முறை
➤ ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன், சிறிதளவு ரவையையும் சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி மாவைப்போன்று தயாரிக்க வேண்டும். பன் அதை உருண்டை பிடித்து தட்டை போல் தட்டிக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறம் வருமளவிற்கு எண்ணெயில் நன்கு பொரிக்கவும். மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் நீண்ட நேரம் எண்ணெய்யில் பொரிக்கவும். தயாரித்த மதுர் வடையை பொருத்தமான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.