தீபாவளி – பல்வேறு முகம், பல்வேறு கதை

இந்திய கலாச்சாரம் பண்டிகைகளால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை உண்டு. தீபாவளிக்கும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தான் தீபாவளி என்கின்றனர் முன்னோர்கள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். எனவே தீ ஒளி என முன்னோர் தெரிவிக்கின்றனர்.  அசுரர்களை, கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது தான் தீபாவளி பண்டிகை என்கின்றன இந்துப் புராணங்கள். இந்துப் புராணங்களில் தீபாவளி குறித்து இவ்வாறு கூறப்படுகின்றது. அதாவது, […]

diwali 2019 diwali timing deepavali celebration diwali history - தீபாவளி - பல்வேறு முகம், பல்வேறு கதை
diwali 2019 diwali timing deepavali celebration diwali history – தீபாவளி – பல்வேறு முகம், பல்வேறு கதை

இந்திய கலாச்சாரம் பண்டிகைகளால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை உண்டு. தீபாவளிக்கும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தான் தீபாவளி என்கின்றனர் முன்னோர்கள்.

ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். எனவே தீ ஒளி என முன்னோர் தெரிவிக்கின்றனர்.


அசுரர்களை, கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது தான் தீபாவளி பண்டிகை என்கின்றன இந்துப் புராணங்கள்.

இந்துப் புராணங்களில் தீபாவளி குறித்து இவ்வாறு கூறப்படுகின்றது. அதாவது, நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால், வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் தான் நரகாசுரன்.

அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரக அசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

நரகாசுரன் , தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதனால் கோபம் அடைந்த மகாவிஷ்ணு நரகாசுரனை கொல்ல முடிவு எடுத்தார். ஆனால் அவன் பெற்ற வரத்தின் படி, அவன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாது. எனவே மகாவிஷ்ணுவின் சூழ்ச்சி செய்து நரகாசுரனுடன் போரிட்டார்.

நரகாசுரனும் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு விஷ்ணு மயக்கம் அடைவது போல நடித்தார். இதை பார்த்த பூமியின் அவதாரமான சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்து அவர் அம்புக்கு இலக்காகி இறக்கும் தருவாயில்தான், சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.

இந்த நேரத்தில் தனது தாயிடம் நரகாசுரன் ஒரு கோரிக்கையை வைத்தான், “ அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும்” என்றான்.

அவனது கோரிக்கையை ஏற்ற மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். நரகாசுரன் மறைந்த நாளே மகிழ்ச்சி பொங்கிய தீபாவளி பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிருஷ்ண லீலை என்றும் கூறுகின்றது புராணம்.

இந்த தீபாவளிக்கு மற்றொரு கதையும் உண்டு. அதாவது, வால்மீகி இராமாயணத்தில் இராமன், இராவணனை கொன்று மனைவி சீதை மற்றும் சகோதரன் லட்சுமணன் உடனும் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். இதையும் தீபாவளி என்று சொல்லப்படுகின்றது.

ஐப்பசி மாதங்களில் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். ஆனால் ஒருசில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உணடு அதாவது ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் யட்ஷ் ராத்திரி என்று தீபாவளி பண்டிகையை குறிப்பிடுகிறது.

இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. விஷ்ணுபுராணத்தில், தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால், லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

ஆனால் ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில் தான், சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்து இறைவன் ஜோதிவடிவாக தோன்றினார்.

இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.

இந்நிலையில், இந்த புராணக்கதைகளை விட வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றது. அதாவது, கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறியுள்ளது. எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் இடம் பெற்றுள்ளன.

தீபாவளி குறித்து, கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்தில், பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diwali 2019 diwali timing deepavali celebration diwali history

Next Story
திருப்பதியில் இப்படியொரு மாற்றமா? 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா?tirupati darshan booking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com