/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-69.jpg)
Diwali 2019 Pooja Time
Diwali 2019 Pooja Time and importance : நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் உற்சாகமாகத் தொடங்கி விட்டன. பண்டிகைக் காலங்கள் என்றாலே மக்களுக்குத் தனி உற்சாகம் பிறந்து விடுகிறது. அதிலும் குறிப்பாகப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான்.
Diwali 2019 Pooja Time and importance
தீபாவளி அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாள். அன்று லட்சுமி பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும் என நம்பப் படுகிறது. விநாயகர் மற்றும் அன்னை மகாலட்சுமி மகாவிஷ்ணுவோடு இருக்கும் படத்தைப் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் பூவையும், மஞ்சளையும் முடிந்து அதைப் படத்துக்கு, அணிவிக்க வேண்டும். அட்சதை, குங்குமம், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை அர்ச்சனைக்குத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.லட்சுமியின் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஞாயிறு அன்று பிற்பகல் 12.10 வரை சதுர்த்தசி அதன் பின்னர் அமாவாசை வருகின்றது.
இருப்பினும் அமாவாசை தினம் பிற்பகல் 12.10 மணிக்கு தான் வருவதால், மாலை நேரத்திலும் இறைவழிபாடு மிகவும் அவசியமாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு அக்டோபர் 25, 2019 வெள்ளிக்கிழமை தந்தேரஸ் எனப்படும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் இரவு 7.08 மணி முதல் 8.15 மணி வரை நல்ல நேரமாகும். அக்டோபர் 25, 2019 தந்தேரஸ் லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள். இந்த ஆண்டு லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள் தன திரயோதசி அக்டோபர் 25, 2019 வெள்ளிக்கிழமை இரவு 7.08 மணி முதல் 8.15 மணி வரை நல்ல நேரமாகும்.
மேலும் படிக்க :தீபாவளி அன்று குபேர பூஜை செய்து வழிபடுவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.