Diwali festival Ganga Snanam: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளியின் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பூஜை செய்து வழிபாடு செய்து, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி மகிழ்வர்.
தீபாவளியின் போது சில பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படும். அந்தவகையில் கங்கா ஸ்நானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது உடம்பில் நல்லெண்ணை தேய்த்து அதிகாலையில் வெந்நீரில் குளிப்பதாகும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். இது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் இதை கட்டாயம் பின்பற்றுவார்கள்.
தந்த்ரயோதசி அல்லது தந்தேராஸ் என்பது தீபாவளி அல்லது தீபத் திருநாளுக்கு முன்பு கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். தந்த்ரயோதசியின் போது லட்சுமி தேவி கடலில் இருந்து வெளியே வந்து காட்சி தருவதாக நம்பப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த ஆண்டு தந்த்ரயோதசி இன்று (அக்டோபர் 22) கொண்டாடப்படுகிறது. இன்று,
செல்வத்தின் கடவுளான குபேரனுடன் லட்சுமி தேவியையும் வழிபடுவர்.
லட்சுமி தேவியை வழிபடுவதன் முக்கியத்துவம்?
இந்நாளில் லட்சுமி தேதி மற்றும் விநாயகரை வழிபாடு செய்வது உகந்தது. ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி பெருகும் என முன்னோர்கள் இந்நாளில் வழிபாடு செய்து வந்தனர். மேலும், தங்கம், வெள்ளி பொருட்களை இந்தாளில் வாங்குவர்.
ஏழை பிராமணன் ஒரு முறை தன்னுடைய துயரங்களை தீர்க்க வேண்டிய போது, சாமியார் ஒருவர் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்து ஆசி பெறுமாறு அறிவுறுத்தினார். அப்படி செய்யும் போது அவருக்கு செல்வ செழிப்புடன் லட்சுமி தேவி ஆசி கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, தந்தேராஸ் அன்று, மக்கள் லட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தால் செல்வம் பெருகும் என ஐதீகம்.
பூஜைக்கு உகந்த நேரம்
அக்டோபர் 22 - சனிக்கிழமை தந்தேராஸ் பூஜை
தந்தேராஸ் பூஜை முகூர்த்தம் - மாலை 07:31 முதல் 08:36 மணி வரை
காலம் - 01 மணி 05 நிமிடங்கள்
பிரதோஷ காலம் - மாலை 06:07 முதல் இரவு 08:36 வரை
விருஷப காலம் - இரவு 07:31 முதல் 09:31 வரை
திரயோதசி திதி ஆரம்பம் - அக்டோபர் 22, 2022 அன்று மாலை 06:02
திரயோதசி திதி முடியும் நேரம் - அக்டோபர் 23, 2022 அன்று மாலை 06:03