Diwali 2022: தித்திக்கும் தீபாவளி! பட்டாசு வெடிக்கும் போது இதெல்லாம் கவனம்
Dos and Don'ts of Diwali| தீபாவளியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை | பட்டாசுகளை வெடிப்பதற்கு நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும். குறைந்தது 3 அடி தூரத்தில் இடைவெளியில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
Dos and Don'ts of Diwali| தீபாவளியின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை | பட்டாசுகளை வெடிப்பதற்கு நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும். குறைந்தது 3 அடி தூரத்தில் இடைவெளியில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
Diwali celebrations 2022 | Diwali precautions | தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதித்துள்ளது.
Advertisment
பட்டாசு வெடிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம். அரசு வழி காட்டும் நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும். மாசு ஏற்படக்கூடிய பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.
ராக்கெட் போன்ற பட்டாசுகளை குடிசை இல்லாத திறந்தவெளி பகுதியில் வெடிக்க வேண்டும். புஸ்வானம் கொளுத்துகிற போது சமமான தரையில் வைத்து, பக்கவாட்டில் நின்று கொண்டு கொளுத்த வேண்டும். போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் பட்டாசுகளைக் கொளுத்த வேண்டாம்.
Advertisment
Advertisements
பட்டாசுகளை வெடிப்பதற்கு நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும். குறைந்தது 3 அடி தூரத்தில் இடைவெளியில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
பட்டாசு கொளுத்தும் போது வாளியில் நீர் நிரப்பி அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரங்கள், பாட்டீல்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது, வெடிக்க வேண்டிய பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது. பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால், அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது.
பட்டாசு கொளுத்தும் போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஒரு வாளியில் நீர் நிரப்பி அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீர் ஊற்றி அனையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள். தீப்புண் மீது தண்ணீர் ஊற்றுங்கள். உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் சுத்தமான துணியை நீரில் நனைத்து கண்களை துடைக்க வேண்டும். அதன் பிறகு கண்கள் மீது பருத்தி துணியை வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
சிசுக்கள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“