Rangoli designs for Diwali images 2022 | தீபாவளித் திருநாள் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்கின்றனர்.
தீப ஒளியே தீபாவளி. இந்நாளில் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல் நாமும் பிறருக்குப் பயன்பட வேண்டும்,’ என்பதை தீபாவளி உணர்த்துகின்றது.
இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில், உங்கள் இல்லங்களை மேலும் அழகாக்க வண்ணக் கோலங்கள் இங்கே உள்ளன.
பூக்கோலம்
வண்ணமயமான ரங்கோலி
மயில் ரங்கோலி

ஸ்டிக்கர் ரங்கோலி
ஒருவேளை உங்களுக்கு கோலம் போட நேரம் இல்லையெனில் நீங்கள் கடைகளில் இருந்து ரங்கோலி ஸ்டிக்கர் வாங்கி அதை உங்கள் முற்றங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“