தீபாவளி பண்டிகை வந்து விட்டது.
பொதுவாக தீபாவளி தினத்தன்று விடியற்காலையில், வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு சடங்கு. இது வெறும் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல, இது உடல் மற்றும் ஆன்மாவின் ஆன்மீக தூய்மை என்கிறார், ஜோதிடர் பண்டிட் ஜகன்னாத் குருஜி.
எண்ணெய் குளியல் சடங்கு
இது சூரியன் உதிக்கும் முன், அதிகாலையில் எழுந்து, தூய்மை மற்றும் பக்தியுடன் பண்டிகையை வரவேற்பதைக் குறிக்கிறது.
எள் எண்ணெய், அதன் சிகிச்சை பண்புகளுக்கு பெயர் பெற்றது, பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், சந்தன பேஸ்ட், கிராம்பு அல்லது மஞ்சள் போன்ற நறுமண கூறுகள், அவற்றின் சுத்திகரிப்பு பண்புகளுக்காக இந்த எண்ணெயில் சேர்க்கப்படுகின்றன.
எண்ணெய் தடவுவதற்கு முன், கடவுளை உளமாற பிரார்த்தனை செய்யுங்கள், செழிப்பான தொடக்கத்திற்கு தெய்வீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள், என்று ஜெகன்னாத் குருஜி கூறினார்.
சூடான எண்ணெய்யை உடலில் மெதுவாக மசாஜ் செய்வது, எண்ணெய் மற்றும் மூலிகைகளின் குணப்படுத்தும் பண்புகளை தோலில் ஊடுருவ அனுமதிக்கிறது. இது உடலை தளர்த்துவது மட்டுமல்லாமல், சருமத்தை வளர்க்கிறது, அடுத்த கட்டத்திற்கு தயார் செய்கிறது.
எண்ணெய் தேய்த்த பிறகு, மூலிகைப் பொடிகள் அல்லது இயற்கை சோப்புகளுடன் சூடான நீரில் குளிப்பது வழக்கம், இதனால் ஒருவருக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், என்று ஜகன்னாத் குருஜி கூறினார்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகரும், சூடான நீரில் குளிக்கும் முன் உடலை எள் எண்ணெய் மற்றும் மூலிகைகளால் தடவுமாறு பரிந்திரைத்தார்.
குளிர்காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாதத்தை குறைக்கவும் மற்றும் சருமத்தை நன்கு வளர்க்கவும் இது அறியப்படுகிறது.
எண்ணெய் தேய்ப்பது மற்றும் சூடான நீரில் குளிப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, தசைகளை தளர்த்துகிறது. உடலுக்கு புத்துயிர் அளிக்கிறது, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது, என்று ருஜுதா கூறினார்.
டாக்டர் சந்தோஷ் பாண்டே (acupuncturist and naturopath, Rejua Energy Center, Mumbai) பின்வரும் நன்மைகளைப் பட்டியலிட்டார்:
குறிப்பாக குளிர்கால மாதங்களில், தோல் வறண்டு, செதில்களாக மாறும். சூடான எண்ணெய் குளியல் சருமத்தை ஊடுருவி, ஈரப்பதமாக்குகிறது. இது வறண்ட சருமத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சூடான எண்ணெயுடன் மென்மையான மசாஜ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது தோல் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த ரத்த சுழற்சி, சரும செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தும்.
வழக்கமான எண்ணெய் குளியல் சருமத்தை நன்கு ஊட்டமளித்து, நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் வயதான செயல்முறையை மெதுவாக்கும்.
எண்ணெய் குளியல் உடல் நலன்களை மட்டுமல்ல, மன தளர்வையும் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.
Read In English: Diwali 2023: Why celebrations begin with Deepavali oil bath custom?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“