இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டங்கள் அதன் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வளமான பாரம்பரியத்திற்கு சான்றாகும். தீபாவளியின் முக்கிய சாராம்சம் ஒன்றுதான் என்றாலும் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பரவலாக வேறுபடுகின்றன.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதர் கா மேளா முதல் மேற்கு வங்காளத்தில் காளி பூஜை மற்றும் கர்நாடகாவில் நரகா சதுர்தசி வரை, ஒவ்வொரு பிராந்தியமும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதன் தனித்துவமான சாயல்களைச் சேர்க்கிறது.
இந்தியாவின் பன்முக தீபாவளி பாரம்பரியங்கள் வழியாக ஒரு பயணம்
பதர் கா மேளா
இமாச்சலப் பிரதேசத மையத்தில், குறிப்பாக ஹாலோக், தாமி கிராமத்தில் தனித்துவமான பத்தர் கா மேளா பண்டிகை முக்கிய இடத்தைப் பெறுகிறது. மேளாவில், மக்கள் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து விளையாடுவர். சுவாரஸ்யமாக, பண்டிகைகளின் போது இந்தக் கற்களால் அடிபடுவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
காளி பூஜை
மேற்கு வங்கம் மற்றும் கிழக்குப் பகுதிகளில், காளி பூஜை மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது. இந்த சடங்கு துர்கா தேவியின் அவதாரமாகக் கருதப்படும் காளி தேவியின் வழிபாட்டை மையமாகக் கொண்டது. மேலும் இது பெங்காலி கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
கர்நாடகா, கோவாவில் நரக சதுர்தசி
தென் மாநிலமான கர்நாடகா மற்றும் கோவா- நரக சதுர்தசியை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன. இது சோட்டி தீபாவளி என்று அழைக்கப்படுகிறது.
இது நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் அழித்த நாளாகும். அன்று மக்கள் விடியும் முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, தீமையை வென்றதைக் குறிக்கும் வகையில் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்.
குஜராத்தின் பிரம்மாண்டம்
குஜராத்தின் குறிப்பிட்ட பகுதிகளில், ஒருவரையொருவர் எரித்த பட்டாசுகளை விளையாட்டாக வீசுவதன் மூலம் தனித்துவமாக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். இது ஆபத்தானதாக தோன்றினாலும், இந்த பழமையான சடங்கு பஞ்சமஹால் கிராமத்தில் ஒரு தனித்துவமான நடைமுறையாகும்.
கூடுதலாக, தீபாவளியின் போது, குஜராத்தில் உள்ள சில வீடுகளில் நெய்யில் தீபம் ஏற்றி, இரவு முழுவதும் எரிக்கிறார்கள்.
இந்த தீபங்களில் மீதமுள்ள எச்சங்கள்- மறுநாள் காலையில் சேகரித்து, பெண்கள் தங்கள் கண்களுக்கு போடும் காஜல் செய்யப் பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.
வாரணாசியின் தேவ தீபாவளி
இந்தியாவின் ஆன்மிக இதயமான வாரணாசி, கங்கை நதிக் கரையை அலங்கரிக்கும் ஆயிரக்கணக்கான மண் விளக்குகளுடன் தேவ தீபாவளியைக் கொண்டாடுகிறது.
அப்போது ஆற்றங்கரைக்கு செல்லும் படிகள் பார்க்க பிரகாசமான காட்சியாக இருக்கும், மேலும் நதியை தெய்வமாக மதிக்க ஆரத்தி விழா நடத்தப்படுகிறது. இருப்பினும், இது தீபாவளிக்கு ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு நடக்கும்.
மகாராஷ்டிரா பாவ் பீஜ்
தீபாவளிக்கு அடுத்த நாள், மஹாராஷ்டிரர்கள் பாவ் பீஜ் பண்டிகை கொண்டாடுகின்றனர். இது சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பை கொண்டாடும் பண்டிகை ஆகும்.
சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களின் நெற்றியில் திலகம் பூசுவார்கள். சகோதரர்கள், பதிலுக்கு, பரிசுகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார்கள். வட இந்தியாவில் உள்ளவர்கள் இதை பாய் தூஜ் என்றும், வங்காளிகள் இதை பாய் ஃபோண்டா என்றும் அழைக்கிறார்கள்.
பண்டி சோர் திவாஸ்
பஞ்சாபில், குரு ஹர்கோவிந்த் ஜி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் - பண்டி சோர் திவாஸ் பண்டிகையுடன் தீபாவளி ஒத்துப்போகிறது. அன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அழகாக ஒளியூட்டப்படும், மேலும் சீக்கியர்கள் பிரார்த்தனை மற்றும் விழாக்களில் ஈடுபடுகின்றனர்.
Read in English: From Naraka Chaturdashi to Pathar Mela, this is how India celebrates Diwali
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“