Advertisment

நினைத்தது நடக்கும்: தீபாவளி அன்று 'மகாலட்சுமி பூஜை' செய்ய வேண்டிய முகூர்த்த நேரம்- அனிதா குப்புசாமி

தீபாவளி அன்று மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டிய முகூர்த்த நேரம் மற்றும் சிறப்புகள் பற்றி பிரபல பாடகி அனிதா குப்புசாமி கூறிய தகவல்கள் இங்கே…

author-image
WebDesk
New Update
Goddess Lakshmi

Diwali 2023: Mahalakshmi Pooja Time and Date

தீபாவளி அன்று வருகிற அமாவாசை திதியில் மகாலட்சுமி தாயார் பூலோகத்திற்கு வந்து மக்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார் என்று புராணம் கூறுகிறது. இந்த அமாவாசை திதியில் லட்சுமி பூஜை செய்து வழிபடும் போது நம்முடைய துன்பம் எல்லாம் நீங்கி, வாழ்வில் சகல வளமும் கிடைக்கும். நாம் கேட்கும் வரங்களை அன்னை கட்டாயம் கொடுத்து அருள்வாள் என்பது ஐதீகம்.

Advertisment

மகாலட்சுமி பூஜை எப்போது செய்ய வேண்டும்?

அமாவாசை திதி, தீபாவளி அன்று மதிய பொழுதில் இருந்து ஆரம்பிக்கிறது. எனவே மாலை வேளையில் பூஜை செய்வது மிகவும் நல்லது.

Diwali

மேற்கண்ட முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி பூஜை செய்துவிட்டால் மிகவும் நல்லது. அப்படி இல்லையெனில் தீபாவளி நாளில்,உங்களுக்கு வசதியாக இருக்கும் மாலை நேரங்களில் நீங்கள் இந்த பூஜை செய்யலாம்.

பூஜை எப்படி செய்வது?

பூஜை ஆரம்பிக்கும் முன் முதலில் விநாயக பெருமானை மனதார வணங்க வேண்டும். உங்களிடம் மகாலட்சுமி படம் அல்லது சிலை இருந்தால், அதை வைத்து நீங்கள் பூஜை செய்யலாம். சரஸ்வதி தேவியையும் வணங்கி கொள்ளுங்கள்.

விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி மூவரும் இணைந்து இருக்கும்  படங்கள் வைத்தும் நாம் வழிபாடு செய்யலாம்.

வீட்டில் செய்த பலகாரங்கள் அல்லது கடையில் வாங்கிய பலகாரங்கள், நெற்பொறி, அவல், பொறிகடலை, வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நைவேத்யமாக படைக்க வேண்டும்.

இந்த பூஜையில் முக்கியமாக சேர்க்க வேண்டியது மஞ்சள், அது கெட்டி மஞ்சள் அல்லது மஞ்சள் தூள் எதுவாகவும் இருக்கலாம்.  பூஜை முடிந்த பிறகு இந்த மஞ்சள் தூளை நீரில் குழைத்து திலகமாக வைக்கலாம்.

மகாலட்சுமி படம் முன், மஞ்சள் பொடியில் ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.

முக்கியமாக பூஜை செய்யும் முன் கையில் மஞ்சள், சிவப்பு கயிறு கட்டிக் கொள்ளவும். எந்த ஒரு வழிபாடும் நாம் காப்புக் கட்டி செய்யும் போது அதற்கு தனிப்பலன்கள் கிடைக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த கயிற்றை கட்டி விடவும்.

உங்களிடம் கயிறு இல்லையெனில் நூலில், மஞ்சளும், குங்குமம் கலந்து அதை கைகளில் கட்டலாம்.

மகாலட்சுமிக்கு தாமரைப் பூ சூட்டலாம். இந்த நாளில் கட்டாயம் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்யத்தில், தேங்காய் உடைத்து, வெத்தலைப் பாக்கு வைக்கவும்.

பூஜை முடிந்த பிறகு மகாலட்சுமிக்கு படைத்த நைவேத்யங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து நாமும் சாப்பிட வேண்டும்.

இப்படி அனிதா குப்புசாமி பல தகவல்களை அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment