Best Rangoli Designs for Diwali 2023: தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை அணிந்து, விளக்கு வைத்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்ப உள்ளது. இந்த வேளையில் வீட்டை அலங்கரிப்பதும் முக்கியமானதாகும். வீடுகளில் தோரணம் கட்டி, வாசலில் வண்ணமையமான கோலமிட்டு மகிழ்வர்.
அந்த வகையில் இந்த தீபாவளியில் 7 சிம்பிள் ரங்கோலி டிசைன்ஸ் பற்றி இங்கு பார்ப்போம்.
பூ வைத்து அலங்காரம்
மிகவும் எளிய ரங்கோலி டிசைன்களில் ஒன்று பலவிதமான காய்ந்த அல்லது புதிய மலர் இதழ்கள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அலங்காரம் செய்வதாகும். இது உங்கள் வீட்டை வண்ணமயமாக மற்றும் பிரகாசமாக மாற்றும்.
மயில் வடிவ ரங்கோலி
மயில் வடிவ ரங்கோலி எப்போதும் பலராலும் விரும்பபடும் தனித்த ரங்கோலி டிசைன் ஆகும். இதை வரைய பொறுமை மற்றும் அதிக கவனம் தேவை. வீட்டு உபயோகப் பொருட்கள் பருத்தி துணிகள், கரண்டிகள் அல்லது குச்சிகள் கொண்டு மயிலை அழகாக வரையலாம்.
தாமரை ரங்கோலி
தாமரை மலர் போன்ற ரங்கோலி மூலம் தூய்மை மற்றும் தெய்வீக அடையாளத்தை பெற முடியும்.
மணல், chalk மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி இந்த நேர்த்தியான வடிவமைப்பை நீங்கள் வடிவமைக்கலாம்.
விநாயகர் வடிவம்
ரங்கோலி கலை மூலம் விநாயகரை வணங்குவதை விட தீபாவளியைக் கொண்டாட வேறு சிறந்த வழி எது? பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்ஸ் பயன்படுத்தி விநாயகர் உருவத்தை எளிமையாக வரைந்து அலங்காரம் செய்யுங்கள். விநாயகரின் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் பெறுங்கள்.
ஸ்வஸ்திகா அல்லது ஓம் சின்னம்
ஸ்வஸ்திகா மற்றும் ஓம் சின்னங்கள் இந்து மதத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
இதை வரைவதும் எளிமையானது. சின்னம் வரைந்து விளக்குகளால் அலங்கரித்து மகிழுங்கள்.
ரங்கோலியில் தீபாவளி வாழ்த்து
ரங்கோலியின் நடுவில் அல்லது பக்கத்தில் ‘ஹேப்பி தீபாவளி’ என எழுதி உங்களின் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் வீட்டை அலங்கரிப்பது மட்டுமின்றி, பண்டிகையின் மகிழ்ச்சியையும் பாசிட்டிவ் எண்ணங்களையும் அழகான ரங்கோலியில் வெளிப்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“