உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. ஒளி, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஐப்பசி மாதத்தின் அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படும். அந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Diwali 2024: Know the date, puja timings, history, and significance behind Deepavali
5 நாள்கள் கொண்டாடப்படும் தீபாவளி, தந்தேராஸ் உடன் தொடங்கி பாய் தூஜுடன் நிறைவுபெறுகிறது.
எனினும், மகாராஷ்டிராவில் ஒரு நாள் முன்னதாக கோ பூஜையுடனும், குஜராத்தில் இரண்டு நாள்கள் முன்னதாககவும் கொண்டாட்டம் தொடங்குகிறது.
இந்து சாஸ்திரங்கள், வழக்கமாக ஐப்பசி மாதம் அமாவாசையுடன் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, அக்டோபர் 29-ஆம் தேதி தந்தேராஸ், அக்டோபர் 30-ஆம் தேதி நரக சதுர்தஷி அல்லது சொட்டி தீபாவளி, அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி லட்சுமி பூஜை, நவம்பர் 2-ஆம் தேதி கோவர்தன் பூஜை மற்றும் நவம்பர் 3-ஆம் தேதி பாய் தூஜ் என 5 நாள்கள் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும்.
மேலும், தீபாவளியன்று நடத்தப்படும் பூஜைகளுக்கான நேரமும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது அதன்படி,
லட்சுமி பூஜை முகூர்த்தம் - மாலை 6:52 முதல் இரவு 8:41 மணி வரை,
பிரதோஷ காலம் - மாலை 6:10 மணி முதல் இரவு 8:52 மணி வரை,
விருஷப காலம் - மாலை 6:52 முதல் இரவு 8:41 வரை,
அமாவாசை திதி தொடக்கம் - அக்டோபர் 31, காலை 6:22 மணி
அமாவாசை திதி முடிவு - நவம்பர் 1 காலை 8:46 மணி
தீபாவளியின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சடங்குகள்:
இந்துக்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை உள்ளடக்கியது. இருளைக் கடந்து ஒளியை ஏற்றவும், அநீதியை நீதியின் மூலம் வெல்வதும், அறியாமையை கடந்து ஆற்றலைப் பெறுவது உள்ளிட்டவற்றை தீபாவளி குறிக்கிறது.
பண்டைய இந்து புராணங்களில் இருந்து தீபாவளி உருவானதாக நம்பப்படுகிறது. அதன்படி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்திக்கு திரும்பினார். அன்றைய தினம் அமாவாசையாக இருந்ததால், அயோத்தி மக்கள் விளக்குகளை ஏற்றியும், ரங்கோலிகள் வரைந்தும் ராமனை வரவேற்றனர்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை, நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். கூடுதலாக, பகவான் விஷ்ணு மற்றும் லட்சுமியின் திருமண நாளை இது குறிக்கிறது.
இவற்றை பறைசாற்றும் விதமாக தீபாவளியை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.
தீபாவளியன்று விநாயகர் மற்றும் ஸ்ரீ லட்சுமியின் புதிய சிற்பங்களை மக்கள் வழிபடுகின்றனர்.
மேலும் லக்ஷ்மி-கணேச பூஜையுடன், குபேர பூஜை மற்றும் பாஹி-கட்டா பூஜையும் மேற்கொள்ளப்படுகிறது.
பூஜையை முடித்த பின்னர், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட சூழலில், வாசகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“