Diwali Adhirasam: தீபாவளி என்றதுமே அனைவருக்கும் இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும். அப்படி பலகாரங்களும் பட்சணங்களும் தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. குறிப்பாக அதிரசம் இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் பாரம்பரிய திண்பண்டம். ஆனால் நிறைய பேர் இதை கடினமான வேலையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அதிரசம் செய்வது ரொம்பவும் ஈஸி. எப்படி செய்வதென இங்கே பார்ப்போம்.
நல்லெண்ணெய் – சிறிதளவு <கப்பின் அளவு சரியாக இருக்கவேண்டும்>
செய்முறை
முதலில் ஒரு கப் பச்சரிசியை 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வையுங்கள். மூன்று மணி நேரத்துக்கு பிறகு, அந்த அரிசியினை 10 நிமிடம் காய வையுங்கள்.
அரிசி மொத்தமாக காயாமல் சற்று ஈரப்பதமாக இருக்க வேண்டும். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு, 3/4 கப் வெல்லத்தை வாணலியில் போட்டு அதனுடன் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்ல பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் 2 ஏலக்காயை நசுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெல்லப்பாகு சூடு ஆறுவதற்கு முன்பு, நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி நன்றாக கலக்குங்கள். மாவு கட்டியாகமல், நன்கு கலந்து விடவும். பின்னர் மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். பிறகு அதிரசமாவினை வட்டமாக தட்டி அந்த எண்ணெய்யில் போட்டு எடுத்தால் அதிரசம் தயார்.
தீ அதிகமாக இருந்தால் அதிரசத்தின் மேல் பகுதி மட்டும் வெந்து, உள்ளே வேகாமல் இருக்கும். எனவே மிதமான தீயில் சிறிது நேரம் வேக விட்டு, அதிரசத்தினை எடுத்தால் சுவையாக இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”