வீட்டை அலங்கரியுங்கள்.....தீப ஒளித்திருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்
Diwali decoration : தொங்கும் விளக்குகள் பல வண்ணங்களில், எம்பிராய்டரி போட்டிருக்கும் தொங்கும் விளக்குகளை வீட்டில் தொங்க விடுவதால், அழகாக இருப்பதோடு, பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் இருக்கும்.
தீப ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, அனைவரும் புத்தாடைகள், பட்டாசு போன்றவற்றை வாங்கிக் கொண்டிருப்போம். மேலும் இந்து பண்டிகைகளிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை தான். ஏனெனில் இந்த பண்டிகையன்று பட்டாசுகளுடன், வீட்டில் இனிப்புகளும் செய்யப்படும். அதுமட்டுமின்றி வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் வீடே குதூகலத்துடன் இருக்கும். ஆகவே ஒருசில எளிமையான மற்றும் பட்ஜெட்டிற்குள் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு அழகாக வீட்டை அலங்கரிக்கலாம்.
Advertisment
இனி தீபாவளியன்று நமது பட்ஜெட்டிற்குள் வீட்டை அழகுப்படுத்த உதவும் சில பொருட்களைப் பார்ப்போமா...
கலர் பேப்பர்
பிறந்த நாள் முதல் பண்டிகைகள் அனைத்தையும் கலர் பேப்பர் கொண்டு வேண்டியவாறு அலங்கரிக்கலாம். ஏனெனில் இது மிகவும் மலிவு விலையிலேயே கிடைக்கிறது. அலங்காரப் பொருட்களில் ஒன்றாகும். தொங்கும் விளக்குகள் பல வண்ணங்களில், எம்பிராய்டரி போட்டிருக்கும் தொங்கும் விளக்குகளை வீட்டில் தொங்க விடுவதால், அழகாக இருப்பதோடு, பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் இருக்கும்.
ரங்கோலி
வீட்டிற்கு வெளியே மற்றும் ஹாலின் நடுவில் அழகான ரங்கோலி கோலத்தைப் போட்டு, அதில் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். சிலைகள் வீட்டின் ஹாலின் நடுவே உள்ள டேபிளில் அழகான தெய்வ சிலையை வைத்து, அந்த சிலையைச் சுற்றி, தீபங்களை வைக்கலாம்.
தீபம்
தற்போது பல டிசைன்களில் தீபங்கள் வருகின்றன. அதிலும் பல்வேறு நிறங்களில் தீபங்கள் கிடைக்கின்றன. ஆகவே பிடித்த டிசைன் மற்றும் நிறத்தில் உள்ள தீபங்களைக் கொண்டும் வீட்டை அலங்கரிக்கலாம். பூத்தொட்டி ஹாலில் உள்ள டேபிளின் நடுவே ஒரு மண்ணால் செய்யப்பட்ட அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி, பூக்களை தூவி, அந்த பாத்திரத்தைச் சுற்றி தீபங்களை வைத்தால், அதுவும் வித்தியாசமான தோற்றத்தைத் தரும்.