தீபாவளி 2021 : விரதம், பூஜை மற்றும் முகூர்த்த நேரம்

Diwali Deepavali 2021 Pooja Muhurat Timing Vrat Vidhi Tamil News அமாவாசை இரவில், புதிதாக நிறுவப்பட்ட விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகள் வைத்து, செழிப்பு மற்றும் புதிய தொடக்கத்தின் நினைவாக லட்சுமி பூஜை செய்யப்படுகிறது.

Diwali Deepavali 2021 Pooja Muhurat Timing Vrat Vidhi Tamil News
Diwali Deepavali 2021 Pooja Muhurat Timing Vrat Vidhi Tamil News

Diwali Deepavali 2021 Pooja Muhurat Timing Vrat Vidhi Tamil News : தீபாவளி அல்லது தீபாவளி பண்டிகை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. தீப ஒளித் திருநாளான இந்த நாள், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்தத் திருநாளில் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து கழுவுவார்கள். பலர் தங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் விளக்குகள் ஏற்றி, பூக்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டு அலங்கரிப்பார்கள்.

இந்த சிறப்பு தினத்தில், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை வணங்குவது வழக்கம். இந்த நாளில் சிறப்புப் பூஜைகள் செய்தால் உடல் நலம், செல்வம், செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அமாவாசை இரவில், புதிதாக நிறுவப்பட்ட விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகள் வைத்து, செழிப்பு மற்றும் புதிய தொடக்கத்தின் நினைவாக லட்சுமி பூஜை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி எப்போது கொண்டாடப்படுகிறது?

இந்து சந்திர நாட்காட்டியின்படி, கார்த்திகை மாதத்தின் 15-வது நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 4 (வியாழன்) அன்று வருகிறது.

விரதம், பூஜை நேரம் மற்றும் முகூர்த்தம் :

இந்த ஆண்டு, drikpanchang.com-படி, லட்சுமி பூஜை முகூர்த்தம், மாலை 06:09 முதல் இரவு 08:04 வரை நீடிக்கும். இந்த நாளில், குபேர அல்லது செல்வத்தின் கடவுளும் வணங்கப்படுகிறார்.
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, தீபாவளி நாளில், முழு நாள் விரதம் இருக்க வேண்டும். உண்ணாவிரதம் நிர்ஜாலா (தண்ணீர் உட்கொள்ளல் இல்லாமல்) அல்லது பழங்களை மட்டுமே உட்கொள்ள அனுமதிக்கும் ஃபாலாஹராக இருக்க வேண்டும். லக்னம், பிரதோஷ நேரம் மற்றும் அமாவாசை திதிக்கு ஏற்ப உரிய முகூர்த்தத்தின் போது பூஜை செய்ய வேண்டும்.

பிரதோஷ காலம் – மாலை 05:34 முதல் இரவு 08:10 மணி வரை
விருஷப காலம் – மாலை 06:09 முதல் இரவு 08:04 வரை
அமாவாசை திதி ஆரம்பம் – நவம்பர் 04, 2021 அன்று காலை 06:03
அமாவாசை திதி முடியும் நேரம் – நவம்பர் 05, 2021 அன்று அதிகாலை 02:44

முழுமையான தீபாவளி பூஜை சடங்கு :

ஆத்மா-ஷோதன் அல்லது சுய சுத்திகரிப்பு, சங்கல்பம் அல்லது விரதத்தைக் கடைப்பிடித்து அர்ப்பணிப்புடன் பூஜை செய்வது, குடும்பத்தில் அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் பொருட்டு சாந்தி பாத மந்திரத்தை ஓதுதல், மங்கள பாத மந்திரத்தை உச்சரித்தல், கலச ஸ்தாபனம், விநாயகப் பெருமானின் பூஜை, நவக்கிரக பூஜை (ஒன்பது கிரகங்களை வழிபடுதல்), லட்சுமி தேவி பூஜை, மகா காளி தேவியின் பூஜை, குபேர பூஜை ஆகிய பிரார்த்தனையுடன் தீபாவளி நாள் நிறைவு பெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diwali deepavali 2021 pooja muhurat timing vrat vidhi tamil news

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com