By: WebDesk
Updated: October 22, 2019, 11:34:20 AM
diwali office decoration ideas
diwali office decoration ideas : தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் புத்தாடைகள், பட்டாசு போன்றவற்றை வாங்கிக் கொண்டிருப்போம். மேலும் இந்து பண்டிகைகளிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை தான். ஏனெனில் இந்த பண்டிகையன்று பட்டாசுகளுடன், வீட்டில் இனிப்புகளும் செய்யப்படும். அதுமட்டுமின்றி வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் வீடே குதூகலத்துடன் இருக்கும்.
இப்படி வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பலர் விரும்புவார்கள். மேலும் விருந்தினர்கள் அதிசயிக்கும் வண்ணம் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் .வீட்டை மட்டும் அலங்கரித்தால் போதுமா? இன்றைய அவசர உலகில் நாம் அதிகமாக செலவிடும் இடம் வேலை செய்யும் ஆபிஸ் தான்.
தினமும் காலை முதல் மாலை வரை ஆபிசிலே கிடக்கிறோம். அப்படியான ஆபிஸை தீபாவளிக்கு அலங்கரிக்காமல் இருந்தால் எப்படி? யோசித்து பாருங்கள். அதற்காக அதிக செலவிடுதல், சிரமம் எடுத்துக் கொள்ளுதல் எதுவும் இருக்காது. நோட் பண்ணிக்கோங்க் வெறும் ரூ. 200 செலவு செய்தாலே போது உங்களை ஆபிஸை தீபாவளிக்கு அட்டகாசமாக மாற்ற முடியும்.
தீபாவளியன்று பட்ஜெட்டிற்குள் ஆபிஸை அழகுப்படுத்த உதவும் சில பொருட்களைப் பார்ப்போமா…
1. பூத்தோட்டி:
ஆபிஸ் நுழைவாயில் உள்ள டேபிளின் நடுவே ஒரு மண்ணால் செய்யப்பட்ட அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி, பூக்களை தூவி, அந்த பாத்திரத்தைச் சுற்றி தீபங்களை வைத்தால், அதுவும் வித்தியாசமான தோற்றத்தைத் தரும். ஆபிஸ் உள்ளே நுழைபவர்களுக்கு ஃப்ர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்ட் இம்ப்ரெஷனாக இருக்கும்.,
2. கலர் பேப்பர்:
பிறந்த நாள் முதல் பண்டிகைகள் அனைத்தையும் கலர் பேப்பர் கொண்டு வேண்டியவாறு அலங்கரிக்கலாம். ஏனெனில் இது மிகவும் விலை மலிவில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகும்.
3. தொங்கும் விளக்குகள்:
பல வண்ணங்களில், எம்பிராய்டரி போட்டிருக்கும் தொங்கும் விளக்குகளை ஆபிஸ் கேபினில் தொங்க விடுவதால், அழகாக இருப்பதோடு, பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் இருக்கும். மொத்த ஆபிஸூக்கும் கலர்ஃபுல் லுக்கை தரும்.
4, பலூன்கள்:
பிறந்த நாளுக்கு ம்ட்டும் பலூன்கள் கிடையாது. இதுப்போன்ற விழா காலங்களிலும் சுவரின் நிறத்திற்கு ஏற்றவாறு பலூன்கள் தேர்ந்தெடுத்து அதில் வித விதமான ரங்கோலிகளை வரைந்து தொடங்க விட்டால் மொத்த ஆபிஸ் பார்ப்பதற்கு அப்படி இருக்கும் போங்க.