Diwali Rangoli design : வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் நாம் நம் வீட்டை அலங்கரிப்போம். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அழகுப்படுத்துவோம்.
Advertisment
சாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது தீபாவளி திருநாளுக்கு. இந்த தீபஒளி திருநாளன்று அனைவரது ஊரிலும் கோலம் போட்டிகள் வேற நடைபெறும், அப்போ என்ன கோலம் போடவேண்டும் என்று ஒரே பதட்டமாக இருக்கும். இந்த தீபாவளியில் ரங்கோலி கோலம் உங்கள் வாசல்களை அழகாக்க வருகிறது
அதுமட்டும் இல்லாமல் இந்த ரங்கோலி கோலம் வாசலில் போடுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும்.தீபாவளி திருநாள் அன்று இந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை போட்டு, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணங்களை அடித்து, பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த ரங்கோலி கோலங்களுக்கு பயன்படுத்தப்படும் மாவு அரிசி மாவு, சுண்ணாம்பு மற்றும் இயற்கை கலர்களை கலந்து செய்யப்படுகிறது. தற்போது இந்த கலர் பொடிகள் மார்க்கெட்டில் நிறையவே கிடைக்கின்றன. ரங்கோலிக்கான டிசைன் வடிவம் கைகளில் போடப்பட்டது ஆனால் இப்பொழுது இதற்கு டென்ஸில்ஸ் மற்றும் நிறைய கருவிகள் வந்துள்ளன. இந்த ரங்கோலி டிசைன்கள் சாதாரண டிசைனிலிருந்து பல வண்ணங்களுடன் பாரம்பரிய வடிவங்களில் என்று நிறைய விதமான வடிவங்களில் போடப்படுகிறது.