குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிதான். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், சில இனிப்பு கார பலகாரங்களை செய்து உங்கள் விருந்தினருக்கு கொடுங்கள் மகிந்து போவார்கள்.
சன்னா தால் ஃப்ரை
தேவையானவை:
கடலைப் பருப்பு - 200 கிராம்,
தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
மிளகாய்த் தூள்,
பெருங்காயத்தூள்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
தேவையான அளவு, எண்ணெய்
செய்முறை:
கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.
பின் இந்த கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுக்க வேண்டும். பின் பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். சுவையான சன்னா தால் ஃப்ரை தயார்.
காராபூந்தி
தேவையானவை:
கடலை மாவு - 200 கிராம்,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை –
சிறிதளவு, உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் மற்றும் பொரித்த கறிவேப்பிலையை நன்கு கலக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் பாதுகாத்து வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.