பட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள்.
தீபாவளி இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…
1) மைசூர் பாக்
மைசூர் பாக்குக்கும் தீபாவளி பலகாரங்களில் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு பலகாரம் இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது. கர்நாடகத்தில் இது மிகவும் பாப்புலராக உள்ளது. அதே போல் நாடு முழுவதும் இது மக்களின் விருப்ப பண்டமாக உள்ளது. மைசூர் பாக் என்பதுதான் இதன் பெயர். சில இடங்களில் இதை மைசூர் பா என்றும் கூறுகிறார்கள். தங்கக் கட்டி போல அழகான வடிவங்களில் இதை செய்வார்கள். அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் அற்புதமான ஸ்வீட்.
2)கேரட் ஹல்வா
தமிழக கல்யாணங்களில் இந்த கேரட் ஹல்வாவும் ஒரு முக்கிய இனிப்பு பொருளாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. காரணம், இதன் சுவை அனைவரையும் ஈர்த்துள்ளதுதான். இந்தியாவின் பல பகுதிகளிலும் கேரட் ஹல்வா பிரபலமாக உள்ளது. இதை தயாரிப்பதும் எளிது. அருமையான சுவையையும் கொண்டது. பார்த்ததுமே நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரட் ஹல்வா, இப்போது தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.
3) அஞ்சீர் கட்லெட்
அஞ்சீர் கட்லெட் , ஜெய்ப்பூரில் பிரபலமானது. இது முந்திரிப் பருப்பில் செய்யப்படும் கட்லெட் வகை. இதை பெரும்பாலும் கடைகளில்தான் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இந்த கட்லெட், தீபாவளிக்கு விசேஷமாக விற்பனை செய்யப்படும்.
4). குஜியா
இந்தியாவின் ராஜஸ்தான் பக்கம் போனால்தான் குஜியா என்ற பலகாரத்தை நீங்கள் சாப்பிடலாம்.
கோதுமை மாவு, மைதா மாவு, சோயா உள்ளிட்டவற்றால் இதை செய்கின்றனர். இது அந்த மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின்போது செய்யப்படும் பாரம்பரிய பலகாரமாகும். இந்த குஜியாவை ஒவ்வொரு ஊரிலும் வேறு பெயர் கொண்டும் அழைக்கின்றனர்.