லட்டு இல்லாத தீபாவளியா? சுவையும் மணமும் ஆஹா!

லட்டு தீபாவளி பண்டிகையை இன்னும் தித்திப்பாக்கும். அந்த அளவிற்கு லட்டு பிரியர்கள் அதிகம்.

By: November 12, 2020, 7:31:49 AM

Diwali Sweets, Laddu Making : தீபாவளி என்றதுமே இனிப்பு தான் நினைவுக்கு வரும். அதிலும் லட்டு தீபாவளி பண்டிகையை இன்னும் தித்திப்பாக்கும். அந்த அளவிற்கு லட்டு பிரியர்கள் அதிகம். சரி இதனை எளிமையாக எப்படி செய்வதென இங்கு பார்ப்போம்.

போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்.. இப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

தேவையானப் பொருட்கள்

கடலை மாவு – 1/4 கிலோ

சோடா உப்பு – சிறிதளவு

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த திராச்சை -20

முந்திரி – 20

கிராம்பு – 5

எண்ணெய் – தேவையான அளவு

சக்கரை – 1/2 கிலோ

ஏலக்காய் தூள் – சிறிதளவு

Laddu Making Video, Ladoo Recipe

செய்முறை

முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி அதனுடன் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி மீடியம் பதத்தில் கரைக்கவும். பிறகு நெய்யில் திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்க வைத்து சக்கரை பாகினை தயார் செய்ய வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கரைத்து வைத்த மாவினை பூந்தி கரண்டி மூலம் எண்ணையில் போட்டு 30 நொடிகள் விட்டால் பூந்தி தயாராகிவிடும்.

இப்படி எல்லா மாவிலும் பூந்தி செய்துக் கொள்ளவும். பிறகு சக்கரை பாகு சூடு குறையும் முன் அனைத்து பூந்திகளையும் அதில் கொட்டவும். அதோடு ஏற்கனவே பொரித்து வைத்த திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பு ஆகியவற்றையும் அதில் கொட்டி நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கையில் எண்ணெய் தடவி சமமான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேறொரு தட்டில் வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் சுவையான லட்டு தயார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Diwali sweets laddu recipe laddu recipe making video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X