diwali tamil diwali oil bath tamil : தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.
தீபாவளி எண்ணெய் குளியல்:
கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.
எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
தீபாவளி அன்று அம்மாவாசை என்பதால் அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே எண்ணெய் தேய்த்து உடலில் எண்ணெய் ஊறிய பின்பு குளிக்க வேண்டும். நேரம் 4 மணி முதல் 5.30 மணிக்குள்
மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது சூரிய ஒளி 30 நிமிடங்களாவது நமது உடலில் பட வேண்டும். வெயில் உள்ள நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்து குளிக்க வேண்டும்.சோப்பு பயன்படுத்த கூடாது. சீகைகாய், அரப்பு, பயித்த மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் குளியலின் மூலம் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறையும் ,உடல் அசதிகள் நீங்கும் இப்படி மேலும் பல நன்மைகளை அடையலாம் . ஆகையால் வருடத்தில் மற்றநாட்களில் எண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகளை பெறலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Diwali tamil diwali oil bath tamil diwali wishes tamil diwali news
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?