தீபாவளி வாழ்த்துகள்: நண்பர்களுக்கு பகிர வண்ணப் படங்கள் இங்கே...

Diwali 2019 wishes, photos : ஃபோன் செய்து கூட தீபாவளி வாழ்த்து சொல்ல நேரமில்லையா?

Diwali wishes images 2019 :  தீப ஒளியின் வண்ண மயமான இருளில் மூழ்கி முத்தெடுத்து வர தயாராகிவிட்டீர்களா இளைஞர்களே? தீபங்களின் ஒளியில் இருள் ஒழியும். தீபாவளித் திருநாள் தீமை வெல்லப்பட்டதின் ஒரு அடையாளம். இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லி, இன்பங்களை பகிர்ந்து, நன்மையின் வெற்றியை கொண்டாடி மகிழ்வோம். இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்.

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான விழாக்களில் ஒன்று தீபாவளி, தீபாவளி பண்டிகையை இந்தியாவின் பிராந்திய, இன, மொழி வேறுபாடுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதிக்குயிலும் வாழும் இந்துக்கள் மாறுப்பட்ட முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர். அதே போன்று சீக்கிய மதம், சமணமதம், புத்தமதம் ஆகிய மதத்தினரும் தீபாவளியை வேறு சில காரணங்களுக்காகவும், மாறுபட்ட கொண்டாட்ட நிகழ்வாக கொண்டாடுகின்றனர்.

இப்படி ஒரு சிறப்பு நாளில் தீபாவளி வாழ்த்து கூறாமல் இருந்தால் எப்படி? முன்பெல்லாம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஹாப்பி தீபாவளி என்று கை கொடுப்போம். இப்போது அப்படியா என்ன? பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையில் ஃபோன் செய்து கூட தீபாவளி வாழ்த்து சொல்ல நேரமில்லை. வாட்ஸ் அப், ஹைக், மெசேஜ் , ஃபேஸ்புக் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை கூறி வருகிறோம்.

நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தீபாவளி வாழ்த்து செய்தியை பகிரவே

Diwali wishes images 2019:  ஐஇ-தமிழ் இணையதளம் சில வண்ண மயமான தீபாவளி வாழ்த்து மடல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

தீபாவளி  திருநாளில் அனைவரது வீட்டில் செல்வம் செழிக்கவும், ஆனந்தம் பெருகும் ஒருவொருக்கொருவர்  வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : Diwali 2019: Pooja Timing, Importance : இந்த நேரத்தில் தீபாவளி பூஜை செய்தால் அவ்வளவு நல்லதாம் தெரியுமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close