தீபாவளி வாழ்த்து தமிழில் சொல்லுங்க... வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு அனுப்ப இனிய தமிழ் வாசகங்கள் இங்கே!

பண்டிகை நாள்களில் நம் உற்றார் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. அந்த வகையில், நம் நெருக்கமான உறவுகளுக்கு வாட்ஸ் ஆப்பில் தமிழில் தீபாவளி வாழ்த்து அனுப்பக் கூடிய வாசகங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

பண்டிகை நாள்களில் நம் உற்றார் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. அந்த வகையில், நம் நெருக்கமான உறவுகளுக்கு வாட்ஸ் ஆப்பில் தமிழில் தீபாவளி வாழ்த்து அனுப்பக் கூடிய வாசகங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
diwali

தீபாவளி பண்டிகை என்றதும் புத்தாடை, இனிப்புகள் உள்ளிட்ட பல நம் நினைவுக்கு வரும். ஆண்டு முழுவதும் அந்த ஒரு நாளுக்காக காத்திருப்போம். அன்றைய தினம் நம் நண்பர்களை சந்திப்பது, குடும்பத்தினருடன் ஒன்றாக இணைந்து உணவருந்துவது என நாள் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.

Advertisment

இந்தியாவை பொறுத்தவரை தீபாவளி மிக முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் கலாசாரத்திற்கு ஏற்றார் போல் தீபாவளியை கொண்டாடுவார்கள். வட இந்தியாவில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புராணங்களின் படி, இராவணனை வதம் செய்த ராமர், அயோத்திக்கு திரும்பிய அன்று அமாவாசையாக இருந்ததால் மக்கள் தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றனர். இதனை தீபாவளியாக கருதி வட இந்தியர்கள் பலர் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

அதே நேரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை கொண்டாடும் வகையில் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்களில் பல கிளைக்கதைகளும் உள்ளன.

இப்படி, பண்டிகையில் பல வேற்றுமைகள் இருந்தாலும், நம் நேசத்திற்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டும் என்றுமே மாறாதது. நேரில் சந்திக்க முடியாத பலருக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மூலம் வாழ்த்துகளை தெரிவிப்போம். அவ்வாறு, தீபாவளிக்கு அனுப்ப நம் தாய்மொழி தமிழில் வாழ்த்து செய்திகள் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.(நன்றி kavithai.blog)

Advertisment
Advertisements

தமிழில் தீபாவளி வாழ்த்துகள்!

"எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உங்களது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!"

"தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!"

 

Deepavali 2024 Rangoli Design

 

"வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்"

"ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,
பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது,
உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது,
பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது.
இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும்,
உற்சாகத்துடனும் கொண்டாட
என் இனிய உறவுகளுக்கு
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!"

"இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி,
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்"

 

thiru karthigai deepam 2023

 

"உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெறிக்க,
தீபாவளி‬ நல்வாழ்த்துகள்"

"தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துகள்..!"

 

festival

 

"வீட்டில் ஒளி ஏற்றும்
நாளாக மட்டும் இல்லாமல்
உங்கள் வாழ்வில் ஒளி வீசும்
நாட்களாக அமைய
தீபாவளி வாழ்த்துகள்"

"தீபத்திருவிழா தீபாவளியில்
வான்வெளி வரைக்கும்
உற்சாகம் பொங்கட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்"

"நல்ல எண்ணங்கள்
என்ற தீப விளக்கை
ஏற்றி வைத்து இருள் என்ற
தீமையை அழிப்பதே தீபாவளி!
என் இனிய தீபாவளி வாழ்த்துகள்"

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindu Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: