/indian-express-tamil/media/media_files/2025/10/19/download-2025-10-19t-2025-10-19-17-52-00.jpg)
வீட்டை பளபளப்பாக சுத்தம் செய்யப் பலர் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அவை உடலுக்கும், சுவர் மற்றும் தரைக்கும் தீங்கான பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக, சமையலறையிலேயே கிடைக்கும் எளிய மற்றும் மலிவான ஒரு பொருள் தான் பேக்கிங் சோடா. சமையலுக்கு மட்டுமின்றி, வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் அற்புத பண்புகளை இது கொண்டுள்ளது.
சமையலறையில் எண்ணெய் பிசுக்களை எளிதாக நீக்கும் முறை
சமையலறை மேடைகள் மற்றும் அடுப்புகளில் எண்ணெய் பிசுக்களும் கறைகளும் அடிக்கடி படிந்து விடும். இதை நீக்குவதற்கு:
- ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை கலந்து கொள்ளவும்.
- அந்த கலவையை எண்ணெய் கறைகள் உள்ள இடத்தில் தெளிக்கவும்.
- சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான தண்ணீரால் துடைத்தால் பளிச்சென சுத்தமாகும்.
பாத்ரூம் டைல்ஸ் மற்றும் சுவர்களில் மஞ்சள் கறைகள் அகற்றும் வழி
பாத்ரூமில் டைல்ஸ் மற்றும் சுவர்களில் உப்புக் கரை, மஞ்சள் கறைகள் எளிதாக படிந்து விடும். இதை நீக்க:
- பேக்கிங் சோடாவை நேராக கறைகளில் தெளிக்கவும்.
- சில நேரம் ஊறவைத்துப் பிறகு தண்ணீரால் நன்கு தேய்த்தால் கறைகள் மறைந்து விடும்.
- விரும்பினால் வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் சுத்தம் செய்யலாம்.
குழாய்களின் உப்பு கறைகளை நீக்கும் முறை
குளியலறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் குழாய்களில் உப்பு கறைகள் படிந்தால் அவை அரிப்பையும் மோசமான தோற்றத்தையும் தரும்.
- மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் செய்யவும்.
- அந்த கலவையை குழாயில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.
- பின்னர் பிரஷ் உதவியுடன் தேய்த்து கழுவினால் குழாய் பளபளப்பாகும்.
- சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் விளைவு இன்னும் சிறந்ததாக இருக்கும்.
கார்ப்பெட்டுகளை சுத்தம் செய்யும் இயற்கை வழி
கார்ப்பெட்டுகளில் சில நாட்களிலேயே தூசி, அழுக்கு, பாக்டீரியா படிந்து நிறம் மாறிவிடும். இதை நீக்க:
- ஒரு வாளியில் துணி துவைக்கும் பவுடர், 4 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும்.
- கார்ப்பெட்டுகளை இதில் 15 நிமிடம் ஊறவைத்து, பின்னர் சுத்தம் செய்தால் அவை புதியது போல் மாறும்.
சுவற்றில் குழந்தைகள் கிறுக்கியதை நீக்கும் யுக்தி
- சுவற்றில் கிராயான் அல்லது பேனாவால் குழந்தைகள் வரைந்தால் அதையும் எளிதாக அகற்றலாம்.
- பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தடவவும்.
- சிறிது நேரம் ஊற வைத்து ஈரத்துணியால் துடைத்தால் கிறுக்கல்கள் முழுமையாக நீங்கும்.
கூடுதல் டிப்ஸ்
- பேக்கிங் சோடாவை வினிகர், உப்பு அல்லது எலுமிச்சை சாற்றுடன் கலந்து பயன்படுத்தினால் கறைகள் வேகமாக நீங்கும்.
- இதன் இயற்கை அமிலத்தன்மை பாக்டீரியாவை அழித்து துர்நாற்றத்தையும் போக்கும்.
எந்தவித கெமிக்கல்களும் இல்லாததால் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
பேக்கிங் சோடா ஒரு மலிவு விலை பொருள் என்றாலும், வீட்டை இயற்கையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க அதற்கும் மேலாக ஒரு சிறந்த தீர்வு இல்லை. பளபளக்கும் சமையலறை, டைல்ஸ் மற்றும் சுவர்களை பெற இன்று முதல் நீங்கள் கெமிக்கல் தயாரிப்புகளை விட பேக்கிங் சோடாவை தேர்வு செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us