கொரியர்கள் தங்கள் அழகான, மென்மையான சருமத்திற்கு பிரபலமானவர்கள். தோல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்கும் ஒவ்வொரும் கொரிய அழகு குறிப்புகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
அந்தவகையில், கொரியன் சீரம், தோல் பராமரிப்பு உலகில் பிரபலமாக உள்ளன.
வீட்டிலேயே கொரிய வைட்டமின் ஈ ஃபேஸ் சீரம் தயாரிப்பது எப்படி என்பது இங்கே.
தேவையான பொருட்கள்
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 3-4
ஜோஜோபா ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
ரோஸ்ஷிப் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
ஆர்கன் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
ஃபிராங்கின்சென்ஸ் எசன்ஷியல் ஆயில்- 5-6 சொட்டுகள்
லாவெண்டர் எசன்ஷியல் ஆயில்- 5-6 சொட்டுகள்
கிளாஸ் டிராப்பர் பாட்டில்
எப்படி செய்வது?
முதலில் சீரம் சேமிக்க கிளாஸ் டிராப்பர் பாட்டிலை கழுவி நன்கு உலர வைக்கவும். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை கவனமாக கிழித்து, பாட்டிலில் எண்ணெயை பிழியவும்.
ஜோஜோபா எண்ணெய், ரோஸ்ஷிப் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் ஆகியவற்றை பாட்டிலில் சேர்க்கவும். இந்த எண்ணெய்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அடுத்து, 5-6 சொட்டு ஃபிராங்கின்சென்ஸ், லாவெண்டர் எசன்ஷியல் எண்ணெய்களைச் சேர்க்கவும். ஃபிராங்கின்சென்ஸ் எண்ணெய் அதன் சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் பண்புகளுக்காக அறியப்படுகிறது, அதே நேரத்தில் லாவெண்டர் எண்ணெய் சருமத்தை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
இப்போது பாட்டிலை நன்கு மூடி, லேசாக குலுக்கவும்.
கொரிய வைட்டமின் ஈ ஃபேஸ் சீரம் இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது! நேரடி சூரிய ஒளியில் இருந்து குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
சுத்தமான, வறண்ட சருமத்தில் சில துளிகள் சீரம் தடவி, மேல்நோக்கி மெதுவாக மசாஜ் செய்யவும். ஸ்கின் கேர் பிராடக்ட்ஸ் அல்லது மேக்கப் போடுவதற்கு முன்பு சீரம் முழுமையாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கவும். சிறந்த முடிவுகளுக்கு, தினமும் காலை, மாலை இரண்டு முறை சீரம் பயன்படுத்தவும்.
இதைத் தொடர்ந்து பயன்படுத்த அதிகரித்த நீரேற்றம், பிரகாசம் மற்றும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைப்பது உட்பட உங்கள் தோலின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் தோற்றத்தில் மேம்பாடுகளை நீங்கள் கவனீப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“