வெயில் காலம் வந்துவிட்டாலே, சருமம் மட்டுமின்றி கூந்தலும் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே இயற்கையான பொருட்களைக் கொண்டு ஒரு சூப்பரான ஹேர் ஆயில் தயாரிக்கலாம்.
Advertisment
இந்த வீடியோவில், கற்றாழை மற்றும் சில எளிய பொருட்களைப் பயன்படுத்தி தலைக்குத் தேய்க்கக்கூடிய எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க!
முதலில், ஒரு கற்றாழை மடலை எடுத்து, ஓரங்களிலுள்ள முட்களை நீக்கிவிட்டு, சிறிது நேரம் கவிழ்த்து வைக்கவும். அப்போது அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் வடியும். அதை நன்றாக கழுவிவிட்டு, கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
Advertisment
Advertisements
அடுத்து, ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இரும்பு வாணலியில் எண்ணெய் காய்ச்சுவது முடிக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. எண்ணெய் லேசாக சூடானதும், நறுக்கி வைத்திருக்கும் கற்றாழை துண்டுகளைப் போடவும். எண்ணெய் தெரிக்கும் என்பதால் கவனமாக போடவும்.
கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதான வெந்தயத்தையும் இதனுடன் சேர்க்கவும். கோடைக்காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கும். வெந்தயம் பொடுகை விரட்டக்கூடிய தன்மை கொண்டது. கூடவே, இடித்து வைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்க்கவும்.
உலர்ந்த மருதாணி இலையையும் இதனுடன் சேர்க்கவும். கற்றாழையில் நீர்ச்சத்து இருப்பதால் எண்ணெய் தெரிக்கும், அதனால் கொஞ்சம் தூரமாக நின்று கிளறி விடுங்கள்.
பொதுவாக, எண்ணெயை வீட்டில் தயாரிக்கும்போது கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை போன்ற பல விஷயங்களை சேர்ப்பார்கள். எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இப்போது எண்ணெய் தயாராகிவிட்டது.
அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் அல்லது வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து வந்தால், கோடைக்காலத்தில் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.