நம்ம பெடிக்யூர் பண்றதுக்கு பார்லர் வரைக்கும் போகணும்னு அவசியமே கிடையாது. வீட்டிலேயே இருக்குற பொருட்களை வச்சு பார்லர் எஃபெக்ட்டில் பெடிக்யூர் செய்யலாம்.
Advertisment
பெடிக்யூர் செய்யும் முறை
*ஒரு பேசினில் வெதுவெதுப்பான தண்ணீர், ஷாம்பு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். இந்தத் தண்ணீரில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் ஊறவையுங்கள்.
*சர்க்கரை, எலுமிச்சை சாறு, மற்றும் சிறிதளவு ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்து கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
*இப்போது, ஊறவைத்த கால்களை நீரில் இருந்து எடுத்து, நீங்கள் தயார் செய்த ஸ்க்ரப்பை எலுமிச்சை துண்டைக் கொண்டு உங்கள் பாதங்களில் மெதுவாக தேய்க்கவும்.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்கள் பாதங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, கறைகளை மறையச் செய்யும்.
சர்க்கரை இறந்த செல்களை நீக்கி, உங்கள் சருமத்தின் மந்தமான தன்மையை குறைத்து, பாதங்களை பிரகாசமாக்கும்.
நன்றாக ஸ்க்ரப் செய்த பிறகு, அதே வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பிறகு சுத்தமான சாதாரண நீரில் மீண்டும் ஒருமுறை அலசுங்கள். பிறகு ஒரு மென்மையான துணியால் கால்களை நன்றாக துடைக்க வேண்டும்.
இறுதியாக, மாயிஸ்சரைசருக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள். இது உங்கள் கால்களுக்கு மிருதுவான பளபளப்பைக் கொடுக்கும்.
பார்த்தீர்களா! இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் பாதங்கள் பார்லரில் பெடிக்யூர் செய்தது போல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். இனி அழகிய பாதங்களுக்கு பார்லர் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே அழகைப் பராமரித்து பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்!