முதுமைக்கு நோ! ஹோம்மேட் ஐ கிரீம் இப்படி பண்ணுங்க

முதுமையின் முதல் அறிகுறிகள் நம் கண்களுக்கு அருகில்தான் தோன்றுகின்றன.

முதுமையின் முதல் அறிகுறிகள் நம் கண்களுக்கு அருகில்தான் தோன்றுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Beauty tips

DIY Under eye cream with natural ingredients

உண்மை என்னவென்றால், நம் சருமத்தை நாம் விரும்புகிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தோல் பராமரிப்பு என்று வரும்போது அண்டர் ஐ க்ரீம் முக்கியம் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, ஆனால் அவை வேலை செய்யுமா?

Advertisment

அண்டர் ஐ கிரீம்’ முக்கியம், ஏனென்றால் நம் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுடன் ஒப்பிடும்போது நம் கண்களைச் சுற்றியுள்ள தோல் மெல்லியதாக இருக்கும். இது மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டது. முதுமையின் முதல் அறிகுறிகள் நம் கண்களுக்கு அருகில்தான் தோன்றுகின்றன.

எனவே, முதுமையின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் அல்லது வீங்கிய கண்களுடன் எழுந்த பிறகு’ பயன்படுத்தப்படும் ஒரு ஐ கிரீம்’ நிச்சயமாக நிறைய உதவுகிறது.

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் ஒன்றை இணைக்க நீங்கள் விரும்பினால், நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இந்த அழகுக் குறிப்பை முயற்சிக்கவும்.

Advertisment
Advertisements

எப்படி செய்வது?

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்க்கவும். இதை ஒன்றாக கலந்து, அதனுடன் ரோஸ் வாட்டர், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். லாவெண்டர், கெமோமில் அல்லது டீ ட்ரீ எண்ணெய் போன்ற உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயையும் நீங்கள் சேர்க்கலாம்.

நன்றாக அதை மிக்ஸ் செய்து ஒரு காற்று புகாத டப்பாவில் மாற்றவும். பிரிட்ஜில் சேமிக்கவும். இது வீக்கத்தைத் தடுக்க உதவும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜெல்லை பயன்படுத்தும் போது, அது உறிஞ்சப்படும் வரை, உங்கள், கண்கள், கண்களுக்கு கீழ் உள்ள பகுதி, மற்றும் புருவம் எலும்பின் மீது மென்மையான அழுத்தத்துடன் வட்ட இயக்கங்களில் தடவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: