scorecardresearch

ஆரஞ்சு தோல், தேங்காய் எண்ணெய்.. வைட்டமின் சி எண்ணெய் வீட்டிலேயே எப்படி செய்வது?

வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது.

DIY Vitamin C oil

வைட்டமின் சி’ பல தோல் நன்மைகளுக்கு அறியப்படுகிறது. இது சுற்றுச்சூழலினால் ஏற்படும் பாதிப்புகள், சூரிய வெளிபாடு மற்றும் மந்தமான தோற்றமளிக்கும் சருமத்தில் இருந்து குணப்படுத்தி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது.

வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது, கரும்புள்ளிகளை  நீக்கி தெளிவான சருமத்தை கொடுக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனவே உங்கள் சருமம் புத்துயிர் பெறவும், சருமத்தின் தெளிவை மேம்படுத்தவும் நீங்கள் விரும்பினால், உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும். 

ஆனால் வைட்டமின் சி எண்ணெய்’ வாங்க அதிக செலவாகும். 2 பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இதை நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்.   

வைட்டமின் சி எண்ணெய் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

1 – ஆரஞ்சு தோல்

1/2 கப் – வர்ஜின் தேங்காய் எண்ணெய்

*ஆரஞ்சு பழத்திலிருந்து தோலை எடுக்கவும். இதை ஒரு மிக்சியில் சேர்த்து அரைக்கவும். இது நன்றாக அரைக்க வேண்டியதில்லை.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.  இதில் ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து கிளறவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், எண்ணெய் லேசாக ஆரஞ்சு நிறமாக மாறும். இப்போது தீயை அணைக்கவும்.

ஒரு பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

நீங்கள் தூங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயை முகம், கை, கால்களில் தடவலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Diy vitamin c oil with orange peel and coconut oil

Best of Express