diya menon instagram vj diya menon sun tv : னிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறார்கள் தொகுப்பாளினிகள். சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது.
Advertisment
சன் மியூசிக் தொகுப்பாளருக்கு எப்போதுமே இளைஞர்கள் வட்டாரத்தில் ஒரு மவுசு உண்டு. அந்த வகையில் சன் டிவியில் மாபெரும் சொத்தாக பல நாட்களாக இருந்து வருபவர் தியா மேனன். சன் டிவியில் "சூப்பர் சேலஞ்ச்' மற்றும் "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தினார்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியையும் நடத்தி வந்த தியாவிற்கு, சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் மீது காதல் வர தற்போது அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமான தியா, மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாராம். பத்தாவது படிக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக வேலை செய்தாராம்.
மலையாளத்தில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ள தியா எம்.பி.ஏ முடித்திருக்கிறார். கோயம்புத்தூரில் இருக்கும்போதுதான் சன் டிவி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்ததாம். தற்போது சென்னைவாசியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
சின்னத்திரையில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்த தியா, "மகான் கணக்கு' என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறாராம். இதைத் தவிர சில டாக்குமெண்டரியில் நடித்திருக்கிறாராம்.கேரளத்து வரவான இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர்.
தியாவின் தங்கை தீப்தி, சன் டிவியின் நிலா சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்போது நிலா சீரியல் ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்த எபிசோட்களில் தீப்தி இருக்க மாட்டார். ஒரு வருடத்துக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியலில் கடந்த 4 மாத எபிசோட்களில்தான் தீப்தி நடித்து வந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news