குழந்தை படுக்கையில் இருந்து விழுந்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த 24 மணிநேரத்திற்கு நீங்கள் குழந்தையை கண்காணிக்க வேண்டும், ஏனெனில் சில மாற்றங்கள் உடனடியாக தோன்றாது.

baby falls off the bed
Do these things if your baby falls off the bed

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு, குழந்தையைப் பராமரிக்க பெற்றோர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கையில், குழந்தை எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புவது நடைமுறை சிந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக பெற்றோர்கள் தங்கள் வீட்டில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரும் கூட குழந்தை, படுக்கையில் இருந்து விழுவது என்பது பல வீடுகளில் நடக்கும் ஒரு பொதுவான விபத்து.

பெங்களூர் சர்ஜாபூரில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர், டாக்டர் லினி பாலகிருஷ்ணன் கூறுகையில், ஒரு குழந்தை பலமுறை கீழே விழும். சில காயங்கள் லேசானதாக இருக்கலாம், மற்றவை குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

“நீங்கள் வேறு வேலையில் உங்களைத் திசை திருப்பும் தருணத்தில், குழந்தை படுக்கையில் இருந்து விழக்கூடும் என்பதை உணர மாட்டீர்கள். ஆனால் அப்படி ஏதாவது நடந்தால், பீதி அடைவதற்குப் பதிலாக, சிறிது நேரம் கவனிக்கவும், ”என்று மருத்துவர் கூறுகிறார்.

விழுந்த பிறகு என்ன செய்வது?

டாக்டர் பாலகிருஷ்ணனின் கூற்றுப்படி, குழந்தை காயம் அல்லது வலியால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பெற்றோர்கள் கவனிப்பது கடினம். “நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் முழுவதும் அமைதியாக இருப்பது”. விழுந்த உடனே அழுகவும், பயப்படாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் கடுமையான காயங்களின் சில வெளிப்படையான அறிகுறிகளைப் பார்க்கவும்.

– சுயநினைவை இழப்பது

– வாந்தி

– தலையில் வீக்கம், காயங்கள் அல்லது கட்டிகள்

– மூக்கில் அல்லது காதில் இருந்து இரத்தம் வெளியேறுவது

– இரத்தப்போக்கு

“இந்த மாற்றங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உடனே நீங்கள் குழந்தையின் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், உங்கள் குழந்தையை தூக்கி, ஆறுதல்படுத்த முயற்சிக்காதீர்கள், ஏனெனில் அசைவு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் குழந்தையின் முதுகு அல்லது கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விழுந்த பிறகு, உங்கள் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டால், அதை அவசரநிலையாகவும் கருதுங்கள். அவர்களைத் தங்கள் பக்கமாகத் திருப்பி, அவர்களின் கழுத்தை நேராக வைத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று அவர் விளக்குகிறார்.

இந்த அறிகுறிகளில் எதையும் நீங்கள் கவனிக்கவில்லை என்றால், உங்கள் குழந்தையை தூக்கி ஆறுதல்படுத்துங்கள் என்று மருத்துவர் கூறுகிறார். “உங்கள் குழந்தை அழுகிறது என்றால், காயம் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. குழந்தைகள் பயப்படும்போது திடுக்கிடுகிறார்கள். அவர்கள் அழுவது சகஜம். அவர்கள் அமைதியடைந்தவுடன், சிராய்ப்பு அல்லது சிறிய காயங்கள் உள்ளதா என்று பாருங்கள். காயங்கள் சிறியதாகத் தோன்றினாலும் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவிருக்கட்டும்

அடுத்த 24 மணிநேரத்திற்கு நீங்கள் குழந்தையை கண்காணிக்க வேண்டும், ஏனெனில் சில மாற்றங்கள் உடனடியாக தோன்றாது. 24 மணி நேரத்திற்குள், குழந்தை அசாதாரண நடத்தை அல்லது தலையில் காயத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை என்றால், அவர்கள் கடுமையான காயத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

குழந்தையை எப்போது அவசர அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்?

சில அறிகுறிகள் கடுமையான காயங்களை குறிக்கும் என்பதால், கீழ்க்கண்ட காரணங்களுக்காக, நீங்கள் குழந்தையை அவசர அறைக்குக்கு அழைத்துச் செல்ல வேண்டும்:

* அதிக தூக்கம்

* சத்தமான அழுகை

* எலும்பு முறிந்ததற்கான அறிகுறிகள்

* மண்டை ஓட்டில் முறிவு

* ஒளி மற்றும் ஒலிக்கு சென்சிட்டிவாக இருப்பது

* வாந்தி

* தலையின் முன் புடைப்பான மென்மையான புள்ளி

* ஆற்றுப்படுத்த முடியாத குழந்தை

“காயத்தின் உடனடி அறிகுறிகள் இல்லாவிட்டால், உங்கள் குழந்தை மூளையதிர்ச்சியால் பாதிக்கப்படலாம், இது மூளைக் காயத்தால் சாதாரண மூளை செயல்பாட்டை தற்காலிகமாக இழக்கச் செய்யும்” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

பின்வரும் மாற்றங்களைக் கவனியுங்கள்:

1. எரிச்சல்

2. தூங்கும் முறைகளில் மாற்றம் (அதிக தூக்கம்)

3. அதிக அழுகை

4. குறிப்பிட்ட நிலையில் அழுவது (Crying in a particular position)

5. ஆற்றுப்படுத்த முடியாதது (Inconsolable)

பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்?

மேற்பார்வையின்றி உங்கள் குழந்தை வயது வந்தோருக்கான படுக்கையில் (adult bed) தூங்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் விழுவதை தடுக்கவும். காயங்களைத் தடுக்க சில பெளன்சி இருக்கைகளை தரையில் வைக்கலாம். மேலும், அவர்களை தனியாக விடாதீர்கள்.

ஒரு குழந்தை வீழுந்த பிறகு, எந்த காரணமும் இல்லாமல் தூங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு சில மணி நேரமும் அவர்களை விழித்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவர் முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Do these things if your baby falls off the bed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express