அடிக்கடி ஏப்பம் வருதா? இதுதான் காரணம்; எச்சரிக்கும் டாக்டர் ராஜலெட்சுமி
ஏப்பம் குறித்த பல்வேறு தகவல்களையும், அதற்கான வீட்டு வைத்தியங்களையும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் மருத்துவர் ராஜலெட்சுமி விரிவாக விளக்கி உள்ளார்.
ஏப்பம் குறித்த பல்வேறு தகவல்களையும், அதற்கான வீட்டு வைத்தியங்களையும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் மருத்துவர் ராஜலெட்சுமி விரிவாக விளக்கி உள்ளார்.
அடிக்கடி ஏப்பம் வருதா? இதுதான் காரணம்; எச்சரிக்கும் டாக்டர் ராஜலெட்சுமி
ஏப்பம்... அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் சாதாரண நிகழ்வு. சாப்பிட்ட பிறகுவோ (அ) அவசரமாக தண்ணீர் குடிக்கும்போதோ ஏப்பம் வந்தால், அது செரிமானத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும். ஆனால், இந்த ஏப்பம் அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்தால், அசௌகரியம் மட்டுமல்ல, உடல் நமக்கு உணர்த்தும் முக்கியமான எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். ASM INFO யூடியூப் சேனல் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் மருத்துவர் ராஜலெட்சுமி, ஏப்பம் குறித்த பல்வேறு தகவல்களையும், அதற்கான வீட்டு வைத்தியங்களையும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார்.
Advertisment
ஏப்பம் ஏன் வருகிறது? ஏப்பம் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, நாம் உணவு உண்ணும்போது அல்லது பேசும்போது, குடிக்கும்போது அதிகப்படியான காற்றை விழுங்குவதால் இது ஏற்படுகிறது. இந்தக் காற்று செரிமானப் பாதைக்குள் நுழைந்து, மீண்டும் வாய் வழியாக வெளியேறும்போதே ஏப்பம் உருவாகிறது. ஆனால், இதைத் தவிர வேறு சில காரணங்களாலும் ஏப்பம் அதிகமாகலாம். உணவு சரியாக செரிமானம் ஆகாதபோது, வயிற்றில் வாயு உற்பத்தி அதிகரித்து ஏப்பம் ஏற்படலாம். சிலருக்கு குறிப்பிட்ட உணவுகள் (கார்பனேட்டட் பானங்கள், பீன்ஸ், முட்டைக்கோஸ்) அதிக வாயுவை உற்பத்தி செய்து ஏப்பத்தை அதிகரிக்கலாம். அவசரமாகச் சாப்பிடுவது (அ) குடிப்பது அதிக காற்றை விழுங்க வழிவகுக்கும்.
ஏப்பத்தின் தன்மையைக் கொண்டும் நமது செரிமான ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, துர்நாற்றத்துடன் கூடிய ஏப்பம், புளிப்பு ஏப்பம் போன்றவை செரிமானப் பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். ஏப்பம் வழக்கத்தைவிட வித்தியாசமாக இருந்தால், கவனிக்க வேண்டியது அவசியம்.
எளிய வீட்டு வைத்தியங்கள்: அதிகப்படியான ஏப்பத்தைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்களை வீடியோ பரிந்துரைக்கிறது. வறுத்த கடலை (பொட்டுக்கடலை) வாயுவைக் குறைக்கும் தன்மை கொண்டது., வெல்லம் செரிமானத்திற்கு உதவுவதோடு, வாயுவையும் கட்டுப்படுத்தும். அவல், இதுவும் வாயுத் தொல்லைகளைக் குறைக்க உதவும். இந்த எளிய உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஏப்பத்தைக் குறைக்கலாம்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.