சாப்பிட்ட உடனே டீ, காஃபி குடிக்கிறீங்களா? இந்த ஆபத்து இருக்கு; டாக்டர் பொற்கொடி எச்சரிக்கை
ஒரு சிலர் சாப்பிட்ட உடனேயே டீ அல்லது காபி குடிக்கிறார்கள். இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு சாப்பிட்ட உடனேயே டீ அல்லது காபி குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சுவதில் அது தடையாக இருக்கும்.

டீ மற்றும் காஃபி இந்தியாவில் மிகவும் பிரபலமான காஃபின் பானங்கள் ஆகும். காலையில் டீ, காபி குடிப்பது என்பது பலருக்கு அந்நாளின் தொடக்கம். ஆனால், டீ, காபி என கண்மூடித்தனமாக குடிப்பது உடல்நலத்திற்கு நல்ல பழக்கம் அல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உண்மையைச் சொல்வதென்றால், பலரால் இந்தப் பழக்கங்களில் இருந்து எளிதில் வெளியேற முடிவதில்லை.
Advertisment
ஒருசிலர் சாப்பிட்ட உடனேயே டீ, காபி குடிக்கிறார்கள். இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு சாப்பிட்ட உடனேயே டீ அல்லது காபி குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சுவதில் அது தடையாக இருக்கும். டீ மற்றும் காபியில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் டானின்கள் எனப்படும் கலவைகள் இதற்குக் காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் பொற்கொடி தனது யூடியூப் சேனலில், சாப்பிட்டு முடித்த உடனே டீ, காபி பருகுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதில் இருக்கக்கூடிய காஃபின் மற்றும் டானின், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சுவதில் அது தடையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார். சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் மருத்துவர் பொற்கொடி, இதனால் Lower Esophagus-க்கு அழுத்தம் தருவதால், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார். சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இதனால், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பொற்கொடி.