சாப்பிட்டவுடன் டாய்லெட் போறீங்களா? உஷார்… கேன்சர் ஆபத்து இருக்கு; டாக்டர் நித்யா
சாப்பிட்ட உடன் டாய்லெட் செல்லும் பழக்கம் உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன அதனால் ஏற்படக்கூடிய பெரிய ஆபத்து என்ன என்று டாக்டர் நித்யா விளக்கி கூறுகிறார்.
சாப்பிட்ட உடன் டாய்லெட் செல்லும் பழக்கம் உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன அதனால் ஏற்படக்கூடிய பெரிய ஆபத்து என்ன என்று டாக்டர் நித்யா விளக்கி கூறுகிறார்.
சாப்பிட்ட உடனேயே வயிறு எரிச்சல் அல்லது ஏதாவது தொந்தரவு ஏற்பட்டு உடனே டாய்லெட் செல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என்று டாக்டர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
அதேபோல ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை கூட டாய்லெட் செல்வது இன்றைய காலத்தில் சாதாரணமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் சாப்பிடாதது அல்லது குடலில் உள்ள ஏதாவது ஒரு இன்ஃபெக்சன் காரணமாக இருக்கும்.
அல்சர் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன இன்ஃபெக்சன் ஏற்படும். அதனால் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காது இதனால் அடிக்கடி டாய்லெட் செல்லும் நிலை ஏற்படும். இந்த அல்சர் பிரச்சினையினால் அதிக சூடு ஏற்பட்டும் அடிக்கடி டாயிலெட் செல்லும் நிலை ஏற்படும்.
அதேபோல அடிக்கடி மலம் செல்பவர்கள் மலம் எப்படி வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ரத்தம் வருகிறதா இது போன்றவற்றை கவனிக்க வேண்டும். ஏனென்றால் இது நாளடைவில் புற்றுநோய் உருவாகும் பிரச்சனையையும் உண்டாக்கும்.
Advertisment
Advertisements
பசி நேரத்தில் சரியான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள், இரவு நேரத்தில் உறக்கம் இல்லாமல் அதிகமான மன உளைச்சலில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும். அதே போல மிகவும் சூடான இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படும்.
அதிகமாக மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள் வேறு ஏதாவது சிகிச்சைக்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேங்காய் பால் தினமும் காலையில் குடிக்கலாம். இதனுடன் சேர்ந்து அதிமதுரம் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம். இவற்றை தொடர்ந்து ஒரு மாதம் எடுத்து வந்தாலே நல்ல மாற்றத்தை காண முடியும் என்கிறார் மருத்துவர் நித்யா.
அதேபோல காரம் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவில் புளி அதிகம் சேர்க்கக்கூடாது. டீ, காபியை தவிர்த்து விட வேண்டும்.
தினமும் வாழைத்தண்டு பூசணிக்காய் எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரத்தில் 8 மணிக்குள்ளாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதேபோல இரவில் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். இட்லி சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.