நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? பாக்டீரியா தொற்று வரும் ஆபத்து இருக்கு; டாக்டர் விஜி எச்சரிக்கை
கெட்டுப்போன உணவைச் சாப்பிட முடியுமா என்று கேட்டால், "கண்டிப்பாக மாட்டோம், எவ்வளவு பசியாக இருந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வோம்".ஆனால், தெரியாமல் சிலர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கெட்டுப்போன உணவைச் சாப்பிட முடியுமா என்று கேட்டால், "கண்டிப்பாக மாட்டோம், எவ்வளவு பசியாக இருந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வோம்".ஆனால், தெரியாமல் சிலர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? பாக்டீரியா தொற்று வரும் ஆபத்து இருக்கு; டாக்டர் விஜி எச்சரிக்கை
கெட்டுப்போன உணவைச் சாப்பிட முடியுமா என்று கேட்டால், "கண்டிப்பாக மாட்டோம், எவ்வளவு பசியாக இருந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வோம்" என்பதுதான் அனைவரின் பதிலும். ஆனால், தெரியாமல் சிலர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது உண்மைதான்.
Advertisment
நிறைய பேருக்கு நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் இரு கைகளிலும் நகங்களை நீளமாக வளர்த்து, அழகாக நெயில் பாலிஷ் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், சிலர் டென்ஷனாக இருக்கும்போது, பதட்டமாக அல்லது கோபமாக இருக்கும்போது நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு என்ன நடக்கிறது தெரியுமா? நாம் சாப்பிடும்போது, வலது கையைப் பயன்படுத்துகிறோம். அப்போது, நகங்களை நாம் சரியாகச் சுத்தம் செய்ய மாட்டோம். உண்ணும் உணவின் சிறிய துகள்கள் நமது நகங்களில், குறிப்பாக உட்புற நகங்களில் படிந்துவிடும். நாம் வெளிப்புறமாக எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும், உட்புற நகங்களில் படிந்திருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்காது.
அப்படியானால் என்ன நடக்கும்? நாம் சாதாரணமாகக் கைகளைக் கழுவிவிட்டு உணவை உண்ணும்போது, நகங்களில் படிந்திருக்கும் அந்தச் சிறிய உணவுத் துகள்கள் மற்றும் அதனுடன் கலந்திருக்கும் கிருமிகள் நமது உணவு குழாய்க்குள் சென்று பாக்டீரியா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜி.
எனவே, நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களும், நகங்களை நீளமாக வளர்க்கும் பழக்கம் உள்ளவர்களும் தயவுசெய்து உங்கள் நகங்களைச் சரியாக வெட்டி, சுகாதாரமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். இது உங்களை அறியாமல் நீங்கள் கெட்டுப்போன அல்லது சுகாதாரமற்ற உணவை உட்கொள்வதைத் தடுக்கும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் விஜி.