தினமும் தீராத தலைவலியா? சூப்பரான வீட்டு வைத்தியம் இதுதான்; டாக்டர் நித்யா
தீரா தலைவலி, மூக்கடைப்பு, நெற்றி வலி எனப் பலரையும் பாடாய்ப்படுத்தும் சைனஸ் பிரச்னைக்கு, சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் இருப்பதாக சித்த மருத்துவர் நித்யா கூறுகிறார்.
தீரா தலைவலி, மூக்கடைப்பு, நெற்றி வலி எனப் பலரையும் பாடாய்ப்படுத்தும் சைனஸ் பிரச்னைக்கு, சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் இருப்பதாக சித்த மருத்துவர் நித்யா கூறுகிறார்.
தினமும் தீராத தலைவலியா? சூப்பரான வீட்டு வைத்தியம் இதுதான்; டாக்டர் நித்யா
தீரா தலைவலி, மூக்கடைப்பு, நெற்றி வலி எனப் பலரையும் பாடாய்ப்படுத்தும் சைனஸ் பிரச்னைக்கு, சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் இருப்பதாக சித்த மருத்துவர் நித்யா கூறுகிறார். இவை உடலின் 'கபம்' அதிகரிப்பதால் ஏற்படும் சளி பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்கிறார்.
Advertisment
தலைவலி ஏன் வருகிறது? இந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் உடலில் 'கபம்' (குளிர்ச்சி) அதிகரிப்பதாகும். இதனால் தொண்டை மற்றும் நுரையீரலில் சளி தேங்கி, சைனஸ் அறைகளில் அடைப்பை ஏற்படுத்தும். நெற்றியில், குறிப்பாக முன் சைனஸ் பகுதியிலும், கன்னம் மற்றும் மூக்கு பகுதிகளிலும் வலி (மேக்ஸில்லரி சைனஸ் தொற்று காரணமாக) இதன் முக்கிய அறிகுறிகள். கபம் 'வாதம்' (உடல் காற்றின் ஒரு வகை) உடன் சேரும்போது, கடுமையான உடல் வலி மற்றும் காய்ச்சல் கூட ஏற்படலாம் என்கிறார் டாக்டர் நித்யா.
வீட்டு வைத்தியங்களும் சித்த மருத்துவ தீர்வுகளும்: டாக்டர் நித்யா பல்வேறு சித்த மருத்துவ முறைகளையும், வீட்டு வைத்தியங்களையும் விளக்குகிறார்:
துளசி தைலம் (Tulasi Thailam): துளசி சாறு, தூதுவளை சாறு, நல்லெண்ணெய், பசும்பால், விளக்கெண்ணெய் (சுமார் 50 மி.லி), மிளகு, சீரகம், வெட்டிவேர், அக்ரகாரம், அதிமதுரம், தக்கோலம் ஆகியவற்றை சேர்த்து, பொடி செய்து, தைலமாக காய்ச்சி பயன்படுத்தலாம். தைலத்தை லேசாக சூடாக்கி தலைக்கு தேய்த்து, உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரம் இருமுறை, வெந்நீரில் குளிப்பதற்கு முன் செய்யலாம். குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் இருந்தால், காலையில் தலை, மார்பு மற்றும் முதுகில் தேய்த்து வெந்நீரில் குளிப்பாட்டலாம்.
Advertisment
Advertisements
நசியம் (Nasal Drops): சுக்கு தைலம், நொச்சி தைலம் அல்லது அணு தைலம் போன்ற எண்ணெய்களை மூக்கில் விடுவதன் மூலம் மூக்கடைப்பு, தலைவலி மற்றும் காது தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
புகை மருத்துவம் (Fumigation): மஞ்சள், மிளகு, வேப்ப இலைகள் அல்லது வேப்பம்பூ போன்ற மருத்துவ மூலிகைகளை எரித்து, அதிலிருந்து வரும் புகையை உள்ளிழுப்பது தலைவலி, காது பிரச்னைகள் மற்றும் உடல் வலியைப் போக்கும்.
ஆடாதோடை மணப்பாகு: குழந்தைகளுக்கு சைனஸ் பிரச்னைகள் இருந்தால், 5 மிலி ஆடாதோடை மணப்பாகுவை வெந்நீரில் கலந்து அருந்தக் கொடுக்கலாம். இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாள்பட்ட தலைவலி மற்றும் பீனிசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.