உடலில் கருப்பான திட்டுகள் இருக்கா? இந்த சாம்பலை தடவுங்க… ஈசியா சரி ஆகிடும்; டாக்டர் நித்யா
உடலில் கரும் திட்டுகள், அரிப்பு, மருக்கள் போன்ற பொதுவான தோல் நோய்களுக்கான காரணங்களையும், அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
உடலில் கரும் திட்டுகள், அரிப்பு, மருக்கள் போன்ற பொதுவான தோல் நோய்களுக்கான காரணங்களையும், அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
உடலில் கருப்பான திட்டுகள் இருக்கா? இந்த சாம்பலை தடவுங்க… ஈசியா சரி ஆகிடும்; டாக்டர் நித்யா
அதிகரித்து வரும் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகள் உள்ளதாக சித்த மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். கரும் திட்டுகள், அரிப்பு, மருக்கள் போன்ற பொதுவான தோல் நோய்களுக்கான காரணங்களையும், அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
Advertisment
டாக்டர் நித்யா அளித்த தகவல்படி, சூரிய ஒளியின் தாக்கம், ஹார்மோன் சமநிலையின்மை, மற்றும் இறந்த தோல் செல்கள் படிதல் போன்றவை முகத்திலும் உடலிலும் கரும் திட்டுகள் உருவாக முக்கிய காரணிகளாகும். சிலருக்கு கடுமையான அரிப்புடன் கூடிய வறண்ட, கடினமான தோல் (dermatitis) ஏற்படுவதாகவும், கழுத்து, கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மருக்கள் என்பவை இறந்த தோல் செல்கள் சேர்ந்து உருவாகும் தேவையற்ற வளர்ச்சிகள் என்றும், கர்ப்பிணிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுவதாகவும் விளக்கினார்.
சித்த மருத்துவ தீர்வுகள்:
டாக்டர் நித்யா, தோல் பிரச்னைகள் பெரும்பாலும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு என்பதால், ரத்த சுத்திகரிப்பு மிக அவசியம் என்பதை வலியுறுத்தினார். இதற்கான சிகிச்சை முறைகள் வருமாறு:
Advertisment
Advertisements
வெளிப்புற பூச்சு: அரச இலை, இலந்தை இலை மற்றும் குப்பைமேனி இலைகளை நிழலில் உலர்த்தி சாம்பலாக்க வேண்டும். இந்த சாம்பலை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கலந்து பசையாக்கி, கரும் திட்டுகள், அரிப்பு உள்ள பகுதிகள் மற்றும் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் நெற்றி அரிப்பு போன்றவற்றுக்கு வாரம் இருமுறை தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
மருக்களுக்கான சிகிச்சை: சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிரட்டை தைலம், மருக்களின் மீது நேரடியாக தடவப்படும்போது அவை உதிர்ந்து விழும்.
உட்புற சுத்திகரிப்பு மற்றும் தடுப்பு: ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, தோல் பிரச்சனைகள் மீண்டும் வராமல் தடுக்க உள் மருந்துகள் அவசியம். புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், குறிப்பாக கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு, ஹார்மோன் சமநிலையின்மை, நீரிழிவு போன்ற அடிப்படை உடல்நலக் கோளாறுகளுக்கு சித்த மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பது தோல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த சித்த மருந்து. இதன் பொடியை அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, முக்கால் கிளாஸ் ஆகும் வரை சுண்டவிட்டு வடிகட்டி குடிக்க வேண்டும். இதை 48 நாட்களுக்கு தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கல்லீரல் மற்றும் தமனிகளில் உள்ள கொழுப்புப் படிவுகளையும் நீக்க உதவும் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.