/indian-express-tamil/media/media_files/2025/03/25/1Y4DpFlE6cyp0r7HDOnX.jpg)
மனதை அமைதிப்படுத்தவும், பதட்டத்தைப் போக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், தோல் அழற்சியைக் குறைக்கவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சந்தனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவை வாசனை திரவியமாகவும் பயன்படுத்தப்படுகிறது
சந்தனத்தை அரைத்து தலையில் தடவினால், கோடைக்காலத்தில் தலையில் ஏற்படும் கொப்புளங்கள், தலைவலி மற்றும் மூளை, இதய பாதிப்புகளை சரி செய்கின்றது. மேலும், உடல் நிலையை சமநிலையில் வைக்கிறது. தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் சந்தன எண்ணெய் பயன்படுகிறது. முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது. கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச்சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
பசும்பாலில் உரைத்துப் புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அலற்சி ஆகியவை தீரும். சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
இதயம் வலுவுறும்.சந்தனத் துண்டுளை நீரில் ஊறவைத்து மைய அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நோய் தீரும். சந்தன எண்ணெய் தைலம் ‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச் சாறு அல்லது கசாயம் 50 மி.லி.யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.