உலகம் முழுவதும் இன்று சர்வதேச எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பலரும் எமோஜி போல வேடமிட்டும், எமோஜியை சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டசாக வைத்துச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டுவிட்டர், மெச்சஞ்சர் மற்றும் செல்போன் மெச்சேஜ் என அனைத்திலும் நம்மால் எமோஜிக்களை பார்க்க முடியும் ஆனால் எந்த எமோஜிக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? எமோஜிக்களை எதற்குப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அல்லது மகிழ்ச்சியான செய்திக்கு பதில் அளிக்கும்போது இந்த எமோஜியை பயன்படுத்துங்கள்.
வெட்கம். உங்களை யாராவது வெட்கப்பட வைத்தால் அல்லது காதலில் வெட்கப்பட்டு கன்னம் சிவந்தால், அவர்களுக்கு இந்த எமோஜி கொண்டு பதில் கூறுங்கள்.
கடும் கோபம். உங்களை கோவப்பட வைத்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த எமோஜி பயனளிக்கும்.
துக்கம் பெருக்கெடுத்து கண்களில் கண்ணீர் ஓடினால், இந்த எமோஜியை தவிர வேறு எந்த எமோஜியாலும் உங்கள் உணர்ச்சியை தெளிவாக பேச முடியாது.
‘சும்மா கடுப்ப கிளப்பாத’ என்று சொல்லாமல் சொல்லும் எமோஜி இது. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தால் செம்ம கடுப்பில் இருந்தால் இந்த எமோஜி போட்டு மெச்சேஜ் அனுப்புங்கள்.
ஏமாற்றம். வெளியே செல்ல திட்டமிட்டு இறுதியில் உங்கள் நணபர்கள் சொதப்பிவிட்டார்களா? அந்த ஏமாற்றத்தை இதில் காமியுங்கள்.
அதிர்ச்சி. வாயை பொளக்கும் அளவிற்கு ஷாக்கான ஒரு செய்தி உங்களுக்கு வந்துள்ளதா? அதற்கு தான் இந்த எமோஜி.
கீழே விழுந்து அடிப் பட்டுவிட்டதா? அல்லது தலையில் ஏதேனும் பலமான அடி விழுந்ததா? அப்போது இந்த எமோஜி பயன்படுத்துங்கள்.
‘என்ன கொடுமை சார் இது?’ என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த எமோஜி. அடக் கண்றாவியே என்றுக் கூட தலையில் அடித்துக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.
கண்ணில் நீர் வரும் அள்விற்கு ஏதோ ஒரு காமெடி நடந்திருக்கிறது. வயிறு வலிக்க சிறித்து மெச்சேஜ் அடிக்க முடியவில்லையா? இந்த எமோஜியை மட்டும் ஒரு தட்டு தட்டிவிடுங்கள்.
யாரையாவது கேலி செய்ய வேண்டுமா? நீங்கள் போடும் மெச்சேஜுக்கு பின்னால் இந்த எமோஜியும் சேர்த்து போடுங்கள்.
இவ்வளவு விஷயம் பேசிட்டு காதல் பற்றி கூறாமல் இருக்கலாமா? உங்கள் மனதில் காதல் அருவி போல் வழிந்தோடுகிறதா? அல்லது உங்கள் காதல் வைரம் போல் பிரகாசமாய் இருக்கிறதா? உங்கள் பயன்பாட்டிற்காகவே இந்த எமோஜி.
ஜாலியாக பார்ட்டி பண்ணலாம் என்று தோன்றுகிறதா? அல்லது டேன்ஸ் ஆடணும் போல இருக்கா? அப்போ இந்த எமோஜியை போட்டு ஒரு ஆட்டம் போடுங்க.
செம்ம டென்ஷனாக இருந்தால் இந்த எமோஜி உபயோகப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.