திருப்பதி ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க பலரும் விரும்புகிறோம். இன்னும் கொஞ்ச நேரம் அருகில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்களா? என அனைவரும் விரும்புவோம்.
இந்த விருப்பம் அனைவருக்கும் சாத்தியம் ஆவது இல்லை. ஆனால் சிலருக்கு மட்டும் இது சாத்தியம் ஆகிறது. இதற்கு அதிர்ஷ்டம் தேவை.
ஏனெனில் திருப்பதியில் காவாளம் உண்டியல் உண்டு. இந்த உண்டியல் எப்போது நிரம்பும் என்று தெரியாது. இந்த உண்டியல் நிரம்பிய உடன் அதில் காணிக்கை போட பக்தர்களை அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள்.
தொடர்ந்து, அந்த உண்டில் சீல் வைக்கப்படும். அப்போது அருகில் உள்ள பக்தர் ஒருவரும் கையெழுத்திட வேண்டும். அந்த அதிர்ஷ்டசாலி பக்தர்கள், பெருமாள் அருகில் நின்று தரிசிக்க அனுமதிக்கப்படுவார்.
அப்போது அவரை யாரும் ஜெருகண்டி ஜெருகண்டி எனக் கூற மாட்டார்கள். அவர் மனமுறுக வேண்டிக் கொண்டு திரும்பலாம்.
இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன என கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“